TGV தொழில்நுட்பத்தில் இயங்கும் வெளிநாட்டு தொடரூந்துகள்!!

3 ஆடி 2017 திங்கள் 10:30 | பார்வைகள் : 20744
Alstom சர்வதேச நிறுவனம் தயாரிக்கும் TGV தொடரூந்துகளும், அதன் வசதிகளும் நீங்கள் அறிந்ததே. பிரான்சின் AGV, TGV, Eurostar போன்ற பல சேவைகளில் எப்போதும் TGV தனித்துவம். அதிக வேகத்தில் நாடு முழுவதும் சீறிப்பாய்கிறது TGV.
ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு வளர்ச்சியினை அடைத்து, நேற்று ஜூலை 2 ஆம் திகதியுடன், வெறும் ஒன்றரை மணிநேரத்தில் பரிசில் இருந்து ரென்னுக்கு செல்லும் அளவு வேகம்.. வேகம்.. வேகமோ வேகம்!! இருக்கட்டும்.. TGV தொழில்நுட்பத்தில் பிரான்சை தவிர, பல நாடுகளிலும் வெவ்வேறு பெயர்களில் இயங்குகிறது.
TGV என்றால் Train à Grande Vitesse (அதிவேக தொடரூந்து), ஸ்பெயினில் AVE (Alta Velocidad Española ) எனும் பெயரில் அதே தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.
பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் பயணிக்கும் Thalys தொடரூந்தும் இதே தொழில்நுட்பத்தில் இயங்குவது தான். தெற்கு கொரியாவில் Korea Train Express (KTX) சேவை, அமெரிக்காவில் Acela Express என பல்வேறு சேவைகள் இதே தொழில்நுட்பம் கொண்டதாகும்.
வெளித்தோற்றமும் வர்ணங்களும் மாறுபட்டாலும்.. உள்ளே வசதிகளும் தொழில்நுட்பமும் ஒன்றுதான். இந்த தொடரூந்துகளில் பயணிக்க நேர்ந்தால் அதை உணர்வீர்கள்!!
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025