Paristamil Navigation Paristamil advert login
PARISTAMIL - இன்றைய ராசி பலன்கள்
இன்று செவ்வாய்க்கிழமை ராசி பலன்கள்

மேஷம்

Paristamil Astrology Daily Horoscope mesham
குடும்பத்தில் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபத்தை காண்பர். பழைய நண்பரை சந்திக்கும் சூழல் கிடைக்கும். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். குடும்பத்துடன் வெளிநாடு சுற்றிப் பார்க்க திட்டமிடுவர். காதல் கசக்கும். விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெற்று தாய்நாடு திரும்புவர். ்

ரிஷபம்

Paristamil Astrology Daily Horoscope risabam
வியாபாரிகள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்துயிடுவீர்கள். தம்பதிகளின் ஒற்றுமை கூடும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். நாத்தனார் தொந்தரவு நீங்கும். மாணவர்கள் நன்கு படிப்பர். ்

மிதுனம்

Paristamil Astrology Daily Horoscope midunam
இன்று மனதிற்கினிய சம்பவம் நிகழும். வெளியூர் பயணம் வெற்றி தரும். கணினி துறையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வர். வாகன பராமரிப்பு செலவு ஏற்படும். உறவினர் சந்திப்பு நிகழும். தேக ஆரோக்கியம் மனநிறைவைத் தரும். ்

கடகம்

Paristamil Astrology Daily Horoscope kadakam
பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்வைத் தரும். தம்பதிகளிடையே நல்லிணக்கம் ஏற்படும். உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அனுசரிப்பது நல்லது. அலுவலக ஆவணங்களை பாதுகாப்பீர்கள். தேவையற்ற சிந்தனையை விலக்குவது நல்லது. நேர்மறையான எண்ணங்கள் தோன்றும். ்

சிம்மம்

Paristamil Astrology Daily Horoscope simmam
உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் அளிக்கப்படும். வேலை இல்லாதவர்களுக்கு இன்டர்வியூ மூலம் வேலை கிடைக்கும். சகோதரர் தங்களுக்கு உதவிகரமாக இருப்பார். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சுப காரியம் கைகூடும். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். தேகம் பளிச்சிடும். ்

கன்னி

Paristamil Astrology Daily Horoscope kani
குடும்பத்தலைவிகளுக்கு சேமிக்கும் எண்ணம் வலுப்பட்டு நகை சீட்டு போன்றவற்றை ஆரம்பிப்பர். எதிர்பார்த்த ஒரு நற்செய்தி வரும். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர். சிறு வியாபாரிகளுக்கு விற்பனை மிகும். பெரிய விசயங்கள் சட்டென்று முடியும். உணவு விசயத்தில் எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்கவும். ்

துலாம்

Paristamil Astrology Daily Horoscope thulam
இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை. ்

விருச்சிகம்

Paristamil Astrology Daily Horoscope virchugam
திருமண பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். ஷேர் மூலம் பணம் வரும். பெண்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து கொண்டு அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வரும். ்

தனுசு

Paristamil Astrology Daily Horoscope danashu
பணவரவு சீராக இருக்கும். நண்பர்களின் ஆலோசனை பயன்தரும். அக்கம் பக்கத்தினரிடம் வாக்குவாதம் வேண்டாம். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பொதுநலத் தொண்டாளர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும். தம்பதிகளிடையே மனஸ்தாபம் ஏற்படும். விட்டுக் கொடுத்து செல்லவும். ்

மகரம்

Paristamil Astrology Daily Horoscope magaram
வியாபாரத்தில் நினைத்த லாபத்தினை ஈட்டுவீர்கள். அலுவலகத்தில் தங்களுக்கு மற்றவரைவிட மதிப்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். மூன்றாம் நபரிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது. தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். ்

கும்பம்

Paristamil Astrology Daily Horoscope kumbam
ஒரு சிலருக்கு வெளிநாடு முயற்சி பயனளிக்கும். பணவரவு திருப்தி அளிக்கும். நவீன வாகனம் வாங்குவீர்கள். ஒரு சிலர் தங்கள் நீண்டகால நண்பரை சந்திக்க செல்வீர்கள். திடீர் பயணங்கள் வந்துப் போகும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மதிப்பார்கள். மாணவர்கள் காதலில் மாட்டாமல் பார்த்து கொள்வது நல்லது. ்

மீனம்

Paristamil Astrology Daily Horoscope meenam
பெண்களின் திருமண வாழ்வு ஜொலிக்கும். வெளியூர் செல்வதில் திட்டங்கள் மாறும். உத்யோகஸ்தர்கள் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவர். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். வாகனத்தில் கவனம் தேவை. வெளிநாடு தொடர்பு பயன்தரும். பொது சேவையில் ஈடுபடுவீர்கள். உடல் நலம் பளிச்சிடும். ்

வர்த்தக‌ விளம்பரங்கள்