ஈபிள் கோபுரத்தின் சகோதரிகள்.
1 புரட்டாசி 2023 வெள்ளி 14:07 | பார்வைகள் : 5055
‘இரும்புப் பெண்’ என்பது ஈபிள் கோபுரத்தின் செல்லப் பெயர், பட்டப் பெயர் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அந்த இரும்புப் பெண்ணுக்கு சகோதரிகள் இருந்தால்..?
இருக்கிறார்கள். பிரான்சில் மட்டுமல்ல. உலகம் முழுவதுமே..! என்ன புரியவில்லையா? ஈபிள் கோபுரத்தின் அழகிலும் புகழிலும் ஈர்க்கப்பட்டு, உலகின் பல நாடுகளில் அதுபோன்ற கோபுரங்களைக் கட்டியிருக்கிறார்கள்.
பட்டியலில் முதலில் இடம்பிடிப்பது இங்கிலாந்து. அங்குள்ள Blackpool எனும் நகரில் அச்சு அசல் ஈபிள் கோபுரம் போலவே ஒரு கோபுரம் உண்டு. 1889 இல் திறந்து வைக்கப்பட்டது நமது 300 மீட்டர் உயர ஈபிள் கோபுரம். சரியாக 5 ஆண்டுகள் கழித்து திறந்து வைக்கப்பட்டது 158 மீட்டர் உயர ‘Blackpool’ கோபுரம்.
லண்டன் வெம்பிளியில் இன்னொரு கோபுரம் அமைத்தார்கள். பெயர் Watkin’s Tower. அதுவும் அப்படியே ஈபிள் கோபுரம் போலவே. ஆனால் சில காரணங்களுக்காக அதனை இடித்துவிட்டார்கள்.
ஈபிள் கோபுரத்தின் அழகு அமெரிக்கர்களையும் மயக்கியது. Las Vegas நகரில் குட்டியாக. ஒரு கோபுரத்தை அமைத்தார்கள். அதற்கு அவர்கள் சூட்டிய பெயரே ‘ஈபிள் கோபுரம்’ என்பதுதான்.
ஜப்பானியர்கள் சும்மா இருப்பார்களா? தங்கள் பங்குக்கு ஈபிளை நகல் எடுத்து ‘டோக்யோ டவர்’ எனும் பெயரில் கோபுரம் கட்டினார்கள்.
அப்படியே அவுஸ்திதேலியா, ஜெர்மனி, சைனா, பனாமா, ரொமேனியா, செக் குடியரசு என எல்லா இடமும் ஈபிள் கோபுரத்துக்கு தங்கைகள் இருக்கிறார்கள்.
கீழே உள்ள படங்களைப் பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.