பிரான்சில் களைகட்டப் போகும் 2024 கோடைகாலம்.
1 புரட்டாசி 2023 வெள்ளி 12:38 | பார்வைகள் : 4215
அடுத்த ஆண்டு இதேகாலப் பகுதி, பிரான்ஸ் முழுவதும் பெரும் கோலாகலமாகவும் கொண்டாட்டமாகவும் இருக்கப் போகிறது. பாதுக்காப்பு கடுமையாக இருக்கும் என்றாலும் மக்களின் உற்சாகத்துக்கும் மகிழ்ச்சிக்கும் குறைவிருக்காது.
காரணம் ஒலிம்பிக் போட்டிகள். Paris 2024 எனவும் Jeux olympiques d'été de 2024 எனவும் அழைக்கப்படும் இந்த கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் தலைநகர் பரிசிலும் ஏனைய 16 நகரங்களிலும் நடைபெறவுள்ளது.
இன்னொரு சிறப்பு என்னவென்றால், பிரான்சின் கடல்கடந்த மாநிலமாகிய Tahiti யிலும் சில போட்டிகள் நடைபெறவுள்ளன. பசுபிக் பெருங்கடலின் மத்தியில் அமைந்துள்ள ஒரு குட்டித்தீவுதான் Tahiti.
அடுத்த ஆண்டு ஜூலை 26 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் ஓகஸ்ட் 11 ஆம் திகதிவரை நடைபெறும். 10,500 வீர வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்கிறார்கள்.
தொடக்கவிழா நடைபெறும் இடம்தான் ஆச்சரியமானது. ஆம். பரிசில் ஓடும் சென் நதியில் மிகப்பெரிய மிதக்கும் மேடை அமைத்து அதில் தொடக்கவிழா நிகழ்வுகளை நடத்தப்போகிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளும் ஒத்திகைகளும் ஏற்கனவே ஓரிருமுறை நடந்துள்ளன. இந்தப் போட்டிகள் தொடர்பான மேலும் பல புதினங்கள் எமது தளத்தில் வெளியாகும்.
இப்போதில் இருந்தே ஒருவித கொண்டாட்ட மனநிலையில் பிரெஞ்சு மக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.