Bobigny : துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி..!
25 ஆடி 2024 வியாழன் 14:14 | பார்வைகள் : 21572
Bobigny நகரில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
Paul-Vaillant-Couturier பகுதியில் இத்துப்பாக்கிச்சூடு அதிகாலை 4 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. மருத்துவ உதவிக்குழு சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டதை அடுத்து, அங்கு விரைந்து சென்ற SAMU குழுவினர், துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபரைக் காப்பாற்ற முயன்றனர். இருந்தபோதும் அவர் உயிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 வயதுடைய இளைஞன் ஒருவரே கொல்லப்பட்டவராவார். ஆயுததாரிகள் மகிழுந்து ஒன்றில் தப்பிச் சென்றுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இதே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan