ஒலிம்பிக் போட்டிகளுக்காக - வலுப்படுத்தப்படும் தொலைத்தொடர்பு சேவைகள்!
25 ஆடி 2024 வியாழன் 16:47 | பார்வைகள் : 4901
ஒலிம்பிக் போட்டிகளுக்காக தொலைத்தொடர்பு சேவைகளை வலுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்பநாள் நிகழ்வு நாளை, ஜூலை 26 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இந்த நிகழ்வுகளைக் காண 300,000 பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், தொலைத்தொடர்பு சேவைகளின் Bandwith மிகவும் அதிகமாக தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டு, அதனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Orange, SFR, Bouygues மற்றும் Free ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது சேவைகளை வலுப்படுத்தியுள்ளன. குறிப்பாக 5G இணைய சேவை அதிகமாக கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.