கஞ்சா சோதனையில் பிடிபட்ட பெரிய ஆயுத களஞ்சியம்!!
14 பங்குனி 2026 சனி 22:56 | பார்வைகள் : 2990
எசோன் பகுதியில் உள்ள அதிஸ்-மொன்ஸ் (Athis-Mons) நகரில், மார்ச் 13 வெள்ளிக்கிழமை மாலை காவல்தறையினர் ரோந்து சென்றபோது, ஒரு அடித்தள கார் பார்க்கிங் பகுதியில் கஞ்சா வாசனையை கவனித்தனர். அங்கு 29 வயதுடைய ஒருவர் தனது காரில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தார். அவரிடம் சிறிய அளவு கஞ்சா இருந்ததால், காவல்தறையினர் அவரது காரையும் பின்னர் வீட்டையும் சோதனை செய்தனர்.
கார் மற்றும் வீட்டில் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதுடன், காவலதுறையினர் பல ஆயுதங்களையும் கண்டுபிடித்தனர். அங்கு A மற்றும் B வகை ஆயுதங்களாக நான்கு கைத் துப்பாக்கிகள் மற்றும் ஏழு நீளத் துப்பாக்கிகள் இருந்தன. அவற்றில் ஒரு கலஷ்னிகோவ் (kalachnikov) துப்பாக்கியும் இருந்தது. மேலும் சுமார் 1,000 குண்டுகளும் அங்கு இருந்தன.
இந்த கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு அந்த நபர் உடனடியாக காவலில் வைக்கப்பட்டார். ஆயுதங்கள் குறித்து நிபுணர் பரிசோதனை நடைபெற்று வருகிறது. விசாரணை இன்னும் தொடர்கிறது, மேலும் அவரின் காவல் காலம் நீட்டிக்கப்பட வாய்ப்பும் உள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan