Paristamil Navigation Paristamil advert login

அறிவிக்கப்பட்ட 30 சென்ட் எரிபொருள் விலைக் குறைப்பு இன்னும் நடைமுறையில் இல்லை!!

அறிவிக்கப்பட்ட 30 சென்ட் எரிபொருள் விலைக் குறைப்பு இன்னும் நடைமுறையில் இல்லை!!

15 பங்குனி 2026 ஞாயிறு 21:21 | பார்வைகள் : 3118


Michel-Édouard Leclerc புதன்கிழமை franceinfo வானொலியில் பேசியபோது, E.Leclerc பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் விலை இரண்டு நாட்களுக்குள் லிட்டருக்கு சுமார் 30 சென்ட் குறையும் என்று அறிவித்தார். ஆனால் இரண்டு நாட்கள் கடந்த பிறகும் அந்த அளவிலான குறைப்பு நிலையங்களில் காணப்படவில்லை.

franceinfo ஆய்வு செய்த அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, ஆய்வு செய்யப்பட்ட 695 லுக்லெர்க் நிலையங்களில் 500-க்கும் மேற்பட்ட நிலையங்கள் விலைகளை புதுப்பித்திருந்தாலும், சராசரி விலைகள் இன்னும் உயர்வாகவே உள்ளன. டீசல் சுமார் 1.978 யூரோ, SP95 1.868 யூரோ, E10 1.811 யூரோ, SP98 1.898 யூரோ என பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அறிவிக்கப்பட்ட 30 சென்ட் குறைப்பு நடைமுறையில் இன்னும் தெரியவில்லை.

இதற்கு காரணமாக சந்தை விலைகளின் திடீர் மாற்றங்களை மிசேல்-எட்வார்ட் லுக்கிலர் குறிப்பிடுகிறார். இருப்பினும், E.Leclerc நிலையங்களில் எரிபொருள் விலை இன்னும் பிரான்ஸ் தேசிய சராசரியை விட சில சென்ட்கள் குறைவாக இருப்பதாக தரவுகள் காட்டுகின்றன.

எழுத்துரு விளம்பரங்கள்