பரிஸ் : காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற மகிழுந்து! - 20 கிலோ போதைப்பொருள் மீட்பு!

25 புரட்டாசி 2023 திங்கள் 12:02 | பார்வைகள் : 13518
காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற மகிழுந்துக்குள் இருந்து 20 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பரிஸ் 20 ஆம் வட்டாரத்தின் rue de Lagny வீதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், சந்தேகத்துக்கு இடமான மகிழுந்து ஒன்றை தடுத்து நிறுத்தினர். ஆனால் மகிழுந்து கட்டுப்பாட்டை மீறி உறுமிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. அதன்போது கட்டுப்பாட்டை இழந்து தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்படிருந்த மகிழுந்துகள் சிலவற்றையும் இடித்து சேதப்படுத்திக்கொண்டு தொடர்ந்து பயணித்தது.
இதனால் காவல்துறையினர், மகிழுந்தை துரத்திச் சென்றனர்.
இந்த துரத்தல், Montreuil (Seine-Saint-Denis) நகர் வரை நீடித்தது. மகிழுந்து மடக்கிப்பிடிக்கப்பட்டு அதன் சாரதியான 28 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். மகிழுந்துக்குள் 19.24 கிலோ எடையுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1