ஜிமெயிலில் Handwriting உள்ளீட்டு வசதியை உருவாக்கிக்கொள்வதற்கு
28 ஐப்பசி 2013 திங்கள் 11:57 | பார்வைகள் : 17951
கூகுள் நிறுவனமானது ஜமெயில் மற்றும் கூகுள் டொக்ஸ் ஆகியவற்றிற்கு தட்டச்சு மூலம் மட்டுமின்றி தற்போது கையால் எழுத்தும் எழுத்துக்களை உள்ளீடு (Input) செய்யும் வசதியை தந்துள்ளது.
இதன் மூலம் கூகுள் டொக்ஸில் 20 இற்கு மேற்பட்ட மொழிகளைப் பயன்படுத்தியும், ஜிமெயிலில் 50 இற்கு மேற்பட்ட மொழிகளைப் பயன்படுத்தியும் உள்ளீடு செய்ய முடியும்.
இதனை செயற்படுத்துவதற்கு முதலில் ஜிமெயிலினை ஓப்பன் செய்து, தொடர்ந்து செட்டிங்ஸ் செய்வதற்கான ஐகானை கிளிக் செய்யவும்.
அதில் General பகுதியில் தென்படும் Enable input tools என்பதை தெரிவுசெய்யவும். இந்த ஒப்சன் தென்படைவில்லையாயின் Show all language options இனை தெரிவு செய்யவும்.
அதன் பின்னர் Input Tools விண்டோ ஒன்று தென்படும், தொடர்ந்து மொழிகளை தேர்வு செய்ய வேண்டும்.
(குறிப்பு - கையெழுத்து மூலமான மொழிகளை தேர்வு செய்யும் ஒப்சன் பென்சில் ஐகானுடன் காணப்படும்)
இதன் பின்னர் சேமிக்கவும், இப்போது ஜிமெயில் விண்டோவானது Refresh ஆகும்.
தொடர்ந்து Handwriting ஒப்சனை பயன்படுத்துவதற்கு அப்பிள் கணினிகளில் Cmd + Shift + K என்ற கீக்களையும், ஏனைய கணினிகளில் Ctrl + Shift + K ஆகிய கீக்களையும் பயன்படுத்த முடியும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan