Paristamil Navigation Paristamil advert login

முதல் முழுமையான மின்சார காரை அறிமுகப்படுத்திய Ferrari

முதல் முழுமையான மின்சார காரை அறிமுகப்படுத்திய Ferrari

25 வைகாசி 2026 திங்கள் 17:17 | பார்வைகள் : 1025


இத்தாலியின் பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பாளரான ஃபெராரி (Ferrari), Luce எனும் தனது முதல் முழுமையான மின்சார காரை ரோம் நகரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

“Luce” என்றால் இத்தாலிய மொழியில் “ஒளி” என்று பொருள். இந்த கார், அதிகபட்சமாக 193 மைல் (310 கிமீ/மணி) வேகத்துடன் செல்லக்கூடியது.

இதன் விலை 500,000 யூரோ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார் நான்கு கதவுகள் கொண்ட பெரிய மொடல் ஆகும்

முன்னாள் ஆப்பிள் டிசைனர் ஜோனி ஐவ் தலைமையிலான LoveFrom ஸ்டூடியோ இதன் வடிவமைப்பில் பங்கு பெற்றுள்ளது.

ஃபெராரி, கடந்த பத்து ஆண்டுகளாக ஹைப்ரிட் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி செய்து வந்த நிலையில், இப்போது மின்சார யுகத்தில் தைரியமான முன்னீடுப்பாக Luce-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

CEO பெனடெட்டோ விக்னா தலைமையில், மரனெல்லோவில் புதிய “e-building” அமைத்து, மின்சார வாகன உற்பத்தியில் பெரும் முதலீடு செய்துள்ளது.

ஆனால், மின்சார ஸ்போர்ட்ஸ் கார்கள் எப்படி சிறப்பாக செயல்படும் என்கிற சந்தேகங்கள் நிலவுகின்றன.

இதனால், Lamborghini தனது மின்சார கார் அறிமுகத்தை 2030-க்கு தள்ளி வைத்துள்ளது. ஃபெராரி கூட தனது இரண்டாவது EV திட்டத்தை 2028-க்கு தள்ளியுள்ளது.

Luce அதிக விற்பனையை நோக்கி அல்ல, 'Luxury Electric Car' என்ற புதிய வரையறையை உருவாக்கும் முயற்சி எனக் கருதப்படுகிறது.

சீனாவின் BYD போன்ற நிறுவனங்கள் புதுமையான EV-களை வெளியிடும் நிலையில், ஃபெராரி தனது அடையாளத்தை காப்பாற்றிக்கொண்டு, மின்சார யுகத்தில் முன்னோடி ஆக முயற்சிக்கிறது.

ஒக்டோபர் 2026 முதல் வாடிக்கையாளர்களுக்கு Luce விநியோகம் தொடங்கும்.