மைக்ரோமேக்ஸ் கான்வாஸ் Turbo மினி
5 மாசி 2014 புதன் 19:05 | பார்வைகள் : 17220
சில மாதங்களாக எதிர்பார்த்து வந்த, மைக்ரோமேக்ஸ் கான்வாஸ் டர்போ மினி மொபைல் போன், விற்பனைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.2.2. இதன் மூலம், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் அனைத்து ஸ்மார்ட் போன்களுடனும் இது விற்பனையில் போட்டியிட முடியும்.
கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து தேவையான புரோகிராம்களைத் தரவிறக்கம் செய்திட முடியும். MediaTek MT6582 குவார் கோர் ப்ராசசர், போனின் இயக்கத்தை 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் கொண்டு செல்கிறது.
1 ஜிபி ராம் மெமரி, 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, அதனை 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி, 1,800 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளன. ஒருமுறை சார்ஜ் செய்தால், தொடர்ந்து 6.5 மணி நேரம் பேசிட முடியும்.
8 எம்.பி. திறனுடன் கேமரா, 5 எம்.பி. திறனுடன் வெப் கேமரா கிடைக்கின்றான.
வெள்ளை மற்றும் நீல வண்ணத்தில் அழகான தோற்றத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு மொபைல் போன் விற்பனை செய்திடும் இணைய தளங்களில் இது விற்பனைக்கு உள்ளது.
விரைவில் விற்பனை மையங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan