ரகசியமாக டிக் டாக் பயன்படுத்தும் மார்க்!
18 கார்த்திகை 2019 திங்கள் 05:47 | பார்வைகள் : 15381
பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் ரகசியாக டிக் டாக் செயலியை பயன்படுத்தி வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் மியூசிக்கல்.லி இணை நிறுவனர் அலெக்ஸ் சூவை சந்தித்து பேசினார், பின்பு அந்த சந்திப்பு குறித்தான எந்த தகவலும் வெளிவரவில்லை.
அதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு மியூசிகல்.லி செயலியை 80 கோடி டாலர்களுக்கு சீனாவை சேர்ந்த பைட்டேன்ஸ் நிறுவனம் வாங்கியது. அதன் பின்பு அந்த செயலி டிக் டாக் என பெயர் மாற்றப்பட்டது. தற்போது உலகளவில் இன்ஸ்டாகிராம் செயலியை விட டிக் டாக் செயலியையே மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
மேலும் ஃபேஸ்புக்கிற்கு பெரும் போட்டியாக டிக் டாக் செயலி இருக்கிறது. இந்நிலையில் மார்க் சக்கர்பக் டிக் டாக் செயலியில் ரகசிய அக்கவுண்ட் ஒன்றை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் அந்த அக்கவுண்ட் @finkd என்னும் பெயரில் இயங்குவதாகவும், அந்த அக்கவுண்ட் வெரிஃபைட் அக்கவுண்ட் இல்லை எனவும் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் ”ரீல்ஸ்” என்னும் அம்சம் கொண்டுவரப்பட்டது. அது டிக் டாக் போட்டியாக கொண்டுவரப்பட்டது என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது மார்க் சக்கர்பர்க் டிக் டாக் செயலியை ரகசியமாக பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan