Paristamil Navigation Paristamil advert login

அலைகள்

அலைகள்

8 ஐப்பசி 2022 சனி 15:22 | பார்வைகள் : 11769


 அலை தீண்டாத மணல்

அங்கே நான் அமர்வதில்லை
அதில் ஒரு பிடிப்பு இல்லை
 
ஒரு அலை தீண்டிப் போனபின்
மறு அலை வந்து சேரும்முன்
வானம் கொஞ்சம்  மிளிர்கிறது
 
அதன்மீதே  
நான் அமர்கிறேன் 
அங்கேதான்
எனது வீட்டை கட்டுகிறேன்.
 
அதுவே இன்னும்
உறுதியாய் இருக்கிறது
 

வர்த்தக‌ விளம்பரங்கள்