எங்கு எழுகிறது காதல்
13 வைகாசி 2026 புதன் 16:29 | பார்வைகள் : 1267
புல் நுனி பனித்துளிகள் படும்
பட்டு பாதங்களிலா ?
தொட்டும் தொடாமலும்
பட்டும் படாமலும்
தென்றல் முத்தமிட்டுச்செல்லும்
மலர் மேனியிலா ?
கார்மேகமும் கதிரவனும் ஆடும்
கண்ணாம்பூச்சி ஆட்டத்தை
காணும் கண்களிலா ?
ருதுவான அன்பின் மொழி
அமைதியின் அரவணைப்பில்
ரீங்காரமாய் ஒலிக்கும் செவிகளிலா ?
முத்தமிட்டு ஒப்பந்தம் செய்த
விண்ணுக்கும் -மண்ணுக்குமான
காதலை மண்வாசனையில்
நுகரும் நாசிகளிலா ?
உன்னோடு உறவாடும் வேளையில்
நேசக்கடல் நீர்வீழ்ச்சியாய் எழும்
நெஞ்ச குழியிலா?
தென்றலிலா?
தொடுதலிலா ?
காற்றிலா?
காரணத்திலா ?
உறவிலா?
ஊடலிலா ?
மயக்கத்திலா ?
மதியிலா ?
மௌனத்திலா?
மரணத்திலா ?
உன்னிலா?
என்னிலா?
எங்கு எழுகிறது காதல்?
தெரிந்தால் எனக்குச் சொல்
எங்கிருந்து எழுகிறதோ
கட்டுக்கடங்காத காதல்
அங்கேயே நான்
உடன் கட்டை ஏறிவிடுவேன்
எங்கு எழுகிறது காதல்?
தெரிந்தால் எனக்குச் சொல்!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan