Paristamil Navigation Paristamil advert login

திருச்சி சர்ச்சில் மண்டியிட்டு நடந்து விஜய் பிரார்த்தனை!

திருச்சி சர்ச்சில் மண்டியிட்டு நடந்து விஜய் பிரார்த்தனை!

20 சித்திரை 2026 திங்கள் 08:15 | பார்வைகள் : 221


திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், அங்கு  ரோடு ஷோ சென்று ஓட்டு சேகரித்தார். அங்குள்ள அந்தோணியார் சர்ச்சில் மண்டியிட்டு  விஜய் பிரார்த்தனை செய்தார்.   அம்மன் கோவிலில் சாத்தாங்கமாக தரையில் விழுந்து வழிபாடு செய்தார்.

சட்டசபை தேர்தலில், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் விஜய், இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார். அதற்காக, மதியம் விமானத்தில் விஜய் திருச்சி வந்தார்.  அங்கிருந்து  கார் மூலம் பிரசாரம் நடக்கும் பகுதிக்கு சென்றார். வழியில் ஏராளமானோர் சாலையில் ஒன்று கூடி விஜயை வரவேற்றனர்.

அத்தொகுதிக்கு உட்பட்ட வயர்லெஸ் சாலை, கேகேநகர் பஸ் ஸ்டாண்ட், கொட்டப்பட்டு ஆகிய இடங்களில் திறந்தவெளி வாகனத்தில் சென்று, ஓட்டு சேகரித்தார்.    வழியில் அவருக்கு ஏராளமானோர் நினைவு பரிசு வழங்கினர்.  மலர்களையும், மாலைகளையும், கலர் காகிதங்கள் மற்றும் கட்சிக் கொடிகளை வீசினர்.

அந்த தொகுதியில் உள்ள அந்தோணியார் சர்ச்சிற்கு விஜய் சென்றார்.  அங்கு,  விஜய் மண்டியிட்டு நகர்ந்து சென்று பிரார்த்தனை செய்தார்.

திருச்சி - புதுக்கோட்டை சாலையில் உள்ள ஸ்ரீ பச்சநாச்சி அம்மன் கோவிலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார். அம்மன் சன்னதியின் முன்பு சாஸ்தாங்கமாக தரையில் விழுந்து வழிபாடு செய்த விஜய், இஸ்லாமிய தொண்டரின் மாற்றுத்திறனாளி மகனுடன் புகைப்படம் எடுத்தார்.  பின்னர் அங்கிருந்து தொண்டர்களுக்கு கையசைத்து விட்டு பிரச்சார வேனில் ஏறிச் சென்றார்.

விஜயை பார்க்க ஏராளமான இளைஞர்கள், சாலைகளில் திரண்டனர். அவர்கள் விஜயை பார்க்க முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.