நாட்டின் நீண்ட காலம் பதவி வகிக்கும் பிரதமர்; ஜூன் 10ம் தேதி புதிய சாதனை படைக்கும் மோடி
4 ஆனி 2026 வியாழன் 09:52 | பார்வைகள் : 636
ஜூன் 10ம் தேதியுடன் தொடர்ந்து 4399 நாட்கள் பிரதமராக பதவியில் நீடித்த முதல் பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார். 4398 நாட்கள் பிரதமராக இருந்த நேருவின் சாதனையை முறியடிக்கிறார்.
2014ம் ஆண்டு மே 26ம் தேதி நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றார். அது முதல் தற்போது வரை அவர் பிரதமராக பொறுப்பில் உளளார். 2025ம் ஆண்டு ஜூலை 25ம் தேதியன்று, முன்னாள் பிரதமர் இந்திராவின் மிக நீண்ட நாட்கள் தொடர்ச்சியாக பிரதமராக இருந்தார் என்ற சாதனையை மோடி முறியடித்தார்.
பிரதமராக இந்திரா, 1966ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி முதல் 1977ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி வரை 4077 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்தார்.
நாட்டின் முதல் பிரதமரான நேரு, 1952ம் ஆண்டு மே 13ம் தேதி முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக பதவியேற்றார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக தொடர்ச்சியாக 4,398 நாட்கள் பணியாற்றினார்.
1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் நேரு பிரதமரான போதிலும், முதல் லோக்சபா தேர்தல் வரை அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக இல்லாமல், இடைக்கால அரசாங்கத்தின் தலைவராகவே இருந்தார்.1964ம் ஆண்டு மே 27ம் தேதி தனது மரணம் வரை நேரு பிரதமராக நீடித்தார்.
தற்போது, ஜூன் 10ம் தேதியன்று, தொடர்ச்சியாக 4399 நாட்கள் பிரதமராக பதவியில் நீடிக்கிறார் என்ற புதிய சாதனையை பிரதமர் மோடி படைக்கிறார். இதன் மூலம் 1964ம் ஆண்டு மே 27ம் தேதி வரை அவர் மறையும் வரை நீடித்த நேருவின் 4398 நாட்கள் என்ற சாதனையை முறியடிக்கிறார்.
பிரதமர் மோடியின் இந்த வரலாற்று சாதனை அரசியல் வாழ்க்கையில் மிக பெரும் மைல்கல்லாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan