அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை: 43 சதவீதத்துடன் தமிழகம் முன்னிலை
27 சித்திரை 2026 திங்கள் 14:38 | பார்வைகள் : 169
தேசிய புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட தகவல்படி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில், 43 சதவீதத்துடன் தமிழகம் முன்னிலையில் உள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் சார்பில், நாடு முழுதும் மாநிலம் வாரியாக, அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவ மனைகளில், சிகிச்சை பெறுவோர் விகிதம், தொற்றா நோய்களுக்கு சிகிச்சை பெறுவோர், சராசரி சிகிச்சை செலவு, மருத்துவ காப்பீடு பயன்படுத்துவோர் குறித்த தகவல் வெளியிடப் பட்டுள்ளது.
இதில், தென் மாநிலங்களை பொறுத்தவரை, தமிழகத்தில் தான், 43 சதவீதம் பேர், உள்நோயாளியாக சிகிச்சை பெற அரசு மருத்துவமனையை தேர்வு செய்கின்றனர். அறக்கட்டளையின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில், 3.6 சதவீதம்; தனியார் மருத்துவமனையில், 53.4 சதவீதம் பேர் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக கேரளா, 30 சதவீதம்; கர்நாடகா, 29.8 சதவீதம்; தெலங்கானா, 29.3 சதவீதம் என, பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தில் முதல்வர் காப்பீடு திட்டத்தில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற, சராசரியாக, 1,357 ரூபாய் செலவாகிறது. இது, தேசிய சராசரியான, 6,631ஐ விட குறைவாகும். தமிழகத்தில், 99 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் தான் நடக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசு, ஆரம்ப சுகாதார, துணை சுகாதார நிலையங்களில் பின்பற்றப்படும் பதிவேடுகள், தனியார் மருத்துவமனை புள்ளிவிபரங்கள் அடிப்படையில், தேசிய புள்ளியியல் அலுவலகம், 'ரேண்டம்' முறையில் சர்வே நடத்தி, ஆண்டுதோறும் முடிவுகளை வெளியிடுவது வழக்கம். அதனடிப்படையில், மத்திய அரசு, சுகாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்களுக்கான கட்டமைப்பு வசதிகள், விழிப்புணர்வு திட்டங்களை பரிசீலிக்கிறது' என்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan