வழக்குப்பதிவு, புலன் விசாரணை பணிகள் சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு கிடையாது: ஐ.ஜி.,
11 ஆனி 2026 வியாழன் 12:40 | பார்வைகள் : 1160
வழக்குப்பதிவு, புலன் விசாரணை போன்ற நடவடிக்கைகளில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பிரிவு போலீசார் ஈடுபட மாட்டார்கள்,'' என, அப்படையின் ஐ.ஜி., பவானீஸ்வரி தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதற்காகவே, பிரத்யேகமாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி இப்படைக்கு, முதல்வர் விஜய், 354 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். இதன் வாயிலாக, ரோந்து பணிக்கு, 316 நான்கு சக்கர வாகனங்கள், 101 இரு சக்கர வாகனங்கள், 49 'டிரோன்' உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
இப்படைக்கு, டி.ஜி.பி., அலுவலகதத்தில் காவல் கட்டுப்பாட்டு அறை ஒன்று ஏற்படுத்தப்பட உள்ளது. புதிதாக, 2,545 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு விரைவில் போலீசார் தேர்வு செய்யப்படுவர்.
மாநிலம் முழுதும், சப் - டிவிஷன் வாரியாக, 270 கண்காணிப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக, 70 குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேவைப்பட்டால், இக்குழுவினருக்கு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வழங்கப்படும்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார், வழக்குப் பதிவு, புலன் விசாரணை போன்ற பணிகளை செய்ய மாட்டார்கள். ஆனால், மாநிலம் முழுதும் பெண்கள் அதிகம் பணிபுரியும் மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் பஸ், ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் என, எல்லா இடங் களிலும் ரோந்து பணியில் ஈடுபடுவர்.
உதவி எண் நாங்கள் குற்றம் செய்த நபர்களை பிடித்து, சட்டம் ஒழுங்கு மற்றும் மகளிர் காவல் நிலையங்களில் ஒப்படைப்போம். தற்போது, அவசர போலீஸ் எண் 100 மற்றும் 112 வாயிலாக, பெண்களிடம் இருந்து தகவல்களை பெற்று வருகிறோம்.
இனி, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்படும். 'காவலன்' உதவி செயலியிலும், அதற்கான வசதி செய்து தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire