Paristamil Navigation Paristamil advert login

புத்தரின் போதனைகளை பின்பற்றுங்கள்; மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி வலியுறுத்தல்

புத்தரின் போதனைகளை பின்பற்றுங்கள்; மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி வலியுறுத்தல்

27 சித்திரை 2026 திங்கள் 09:38 | பார்வைகள் : 179


உலகம் தொடர்ந்து நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டு வருவதால், புத்த பகவானின் கொள்கைகளையும், போதனைகளையும் பின்பற்றுமாறு பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். புத்த பூர்ணிமாவை முன்னிட்டு மக்களுக்குத் தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புத்தரின் வாழ்க்கை போதனைகள் இன்றும் நாட்டு மக்களுக்கு தேவையானதாகவும் பொருத்தமானதாகவும் உள்ளன. அமைதி என்பது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருந்து தொடங்குகிறது என்று அவர் போதித்துள்ளார்.

தன்னை வெல்வதே மகத்தான வெற்றி என்பதே அவரது போதனை. உலகம் தற்போது எதிர்கொண்டு வரும் மோதல்கள், பதற்றங்கள் காரணமாக புத்தரின் போதனைகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது மிகப் பொருத்தமானதாக உள்ளன.

காற்றாலை மின்சார உற்பத்தியில் உலகளவில் 4வது இடத்தில் இந்தியா உள்ளது. கல்பாக்கம் அணுமின் நிலையம் வெற்றிகரமாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. வளர்ச்சி அடைந்த  இந்தியாவை உருவாக்குவதில் அணுமின் நிலையம் முக்கியத்துவம் வாய்ந்தது. நமது அணு விஞ்ஞானிகள் சாதனை படைத்து பாரதத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

இது பாரதத்தின் அணுசக்திப் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் ஆகும்.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த அணு உலை முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்கூட்டியே மக்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்வதால் மக்கள் தொகை கணக்கெடுப்பு சிறப்பாக நடக்கும். காற்றாலை மின் உற்பத்தி துறையில் இந்தியா ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. தற்போது உற்பத்தித் திறன் 56 ஜிகாவாட்டைத் தாண்டியுள்ளது. மின்சாரத்தை சேமிக்க வேண்டும்.

குழந்தைகள் தங்கள் கோடை விடுமுறையை முழுமையாகக் கொண்டாட வேண்டும். புதிதாக ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். கோடைக்காலத்தில் அனைவரும் தங்கள் உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.