ஈராக்கில் கடத்தப்பட்ட அமெரிக்க பெண் ஊடகவியலாளர் ஷெல்லி கிட்டில்சன் விடுவிப்பு
8 சித்திரை 2026 புதன் 16:44 | பார்வைகள் : 1383
ஈராக் தலைநகரான பாக்தாத்தில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட அமெரிக்க பெண் ஊடகவியலாளர் ஷெல்லி கிட்டில்சன் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த மார்ச் 31ஆம் திகதி பாக்தாத்தில் ஈரானின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான 'கதாயிப் ஹிஸ்புல்லாவினரால் இவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, பெண் ஊடகவியலாளர் விடுவிக்கப்படுவார் என அக்குழு அறிவித்ததோடு, அவர் விடுவிக்கப்பட்டதும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்திருந்தது.
இந்நிலையில் குறித்த குழுவினரால் விடுவிக்கப்பட்டுள்ள ஷெல்லி கிட்டில்சன் குறித்து மார்கோ ரூபியோ கூறுகையில், கிட்டில்சன் ஈராக்கிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு தேவையான உதவிகள் அனைத்தையும் வழங்குவதாக தெரிவித்தார்.
ஷெல்லி கிட்டில்சன் (வயது 49) பல ஆண்டுகளாக மத்திய கிழக்கில் சுயாதீன ஊடகவியலாளராக பணியாற்றி வரும் நிலையில், கடத்தப்பட்டதற்கு சில நாட்களுக்கு முன்பு பணி நிமித்தம் ஈராக்கிற்குள் நுழைந்ததாக குறிப்பிடப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan