Paristamil Navigation Paristamil advert login

அபுதாபியில் ஈரான் ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டதில் இருவர் உயிரிழப்பு

அபுதாபியில் ஈரான் ஏவுகணை இடைமறித்து  அழிக்கப்பட்டதில் இருவர் உயிரிழப்பு

27 பங்குனி 2026 வெள்ளி 08:58 | பார்வைகள் : 1429


அபுதாபியில் ஈரான் ஏவுகணை வீசப்பட்ட வேளையில் அதை இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டபோது, சிதறிய ஏவுகணையின் பாகங்கள் விழுந்து, இருவர் உயிரிழந்ததோடு, 3 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை (26) ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகரான அபுதாபியில் பறந்த ஈரான் ஏவுகணை தடுத்து அழிக்கப்பட்டபோது ஏவுகணைச் சிதறல்கள் சுவீஹான் வீதியில் விழுந்துள்ளது.

அந்த ஏவுகணை பாகங்கள் மோதி உயிரிழந்த இருவரில் ஒருவர் இந்தியர் என்றும் மற்றையவர் பாகிஸ்தானியர் என்றும் அபுதாபி ஊடக நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

மேலும், இதில் இந்தியா, யுஏஇ, ஜோர்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 3 பேர் காயமடைந்துள்ளனர்.

ஈரானின் வான்வழித் தாக்குதலை முறியடிப்பதற்கான இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டபோதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

பாகங்கள் விழுந்த பகுதியில் ஏற்பட்ட வாகன சேதங்கள் உள்ளிட்ட பெருமளவு பாதிப்புகளை நிவர்த்தி செய்ய அவசர உதவி சேவைக் குழுவினர் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.