ஹண்டா வைரஸ் பாதிக்கப்பட்ட கப்பலில் இருந்து வெளியேறிய 20 பிரித்தானியர்கள்
11 வைகாசி 2026 திங்கள் 06:58 | பார்வைகள் : 1325
MV Hondius என்ற சுற்றுலா கப்பலில் ஹண்டா வைரஸ் பாதிக்கப்பட்ட அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தது.
வைரஸ் பாதிக்கப்பட்ட MV Hondius என்ற சுற்றுலா படகில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரித்தானியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர்.
நெதர்லாந்தின் MV Hondius என்ற சுற்றுலா படகில் ஹண்டா வைரஸ்(Hantavirus) பரவியதை அடுத்து இந்த கப்பலானது ஸ்பெயின் நாட்டின் டெனெரிஃபில் நங்கூரமிட்டு உள்ளது.
பல்வேறு கட்ட பரிசோதனைக்கு பிறகு கப்பலில் இருந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படாத சுற்றுலா பயணிகள் கடுமையான சுகாதார பரிசோதனைகளுக்கு பிறகு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் MV Hondius என்ற சுற்றுலா கப்பலில் இருந்து கிட்டத்தட்ட 20 பிரித்தானியர்கள் பத்திரமாக தாயகம் திரும்பியுள்ளனர்.
கிடைத்துள்ள தகவலின் படி, பிரித்தானிய சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த இங்கிலாந்து விமானம் தற்போது பிரித்தானியாவில் தரை இறங்கியுள்ளது.
பிரித்தானியா வந்துடைந்துள்ள 20 பேரில் யாருக்கும் ஹண்டா வைரஸ் தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கப்பலில் இருந்த சுற்றுலா பயணிகள் மெர்சிசைடில் உள்ள அரோ பார்க் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
20 சுற்றுலா பயணிகளுக்கும் 72 மணி நேரம் தனிமைப்படுத்தப்பட்டு தொற்றுன் கட்டுப்ப்பாடு நடைமுறையில் கீழ் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள்.
வைரஸ் பாதிப்பு இல்லாத சூழ்நிலையில், அவர்களிடம் இருந்து பாதுகாக்கப்பட்ட சூழலில் விரிவான சோதனை நடத்தப்படும்.
72 மணி நேரத் தீவிர தனிமைப்படுத்தப்படல் நடவடிக்கைக்கு பிறகு வீட்டிற்கு அவர்கள் அனுப்பப்பட்டாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக மேலும் 45 நாட்களுக்கு அவர்களது வீட்டில் தனியாக வாழ வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹண்டா வைரஸ் என்பது பெரும்பாலும் எலி போன்ற ஊர்வன விலங்குகளிடம் இருந்து பரவ கூடியது.
இது மனிதர்களுக்கு கடுமையான சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு ஹண்டா வைரஸ் பரவுவது மிகவும் அரிது என்றாலும், அதன் தீவிரத்தன்மை காரணமாக 45 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு நடவடிக்கை அமுல்படுத்தப்பட வேண்டும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan