கத்தார் கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது ட்ரோன்கள் தாக்குதல்
11 வைகாசி 2026 திங்கள் 10:10 | பார்வைகள் : 1353
கத்தார் கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தத் தாக்குதலை நடத்தியது ஈரானா அல்லது வேறு அமைப்பினரா என உறுதியான தகவல் இல்லை.
அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சண்டை நிறுத்தம் அமுலில் உள்ளது.
இதனால் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரானோ அல்லது ஈரான் மீது அமெரிக்காவோ இதுவரை பெரிய அளவில் தாக்குதல் நடத்தவில்லை.
கத்தார் நாட்டின் கடற்பகுதியில் வைத்து சரக்கு கப்பல் மீது ட்ரோன்கள் மூலம் ஞாயிற்றுக்கிழமை திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் அந்தக் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. எனினும் தீ உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்றும் கத்தார், குவைத் ஆகியவை தெரிவித்துள்ளன.
ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட கப்பல், எந்த நாட்டுக்குச் சொந்தமானது, அதன் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது ஈரானா அல்லது வேறு அமைப்பினரா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.
எனினும், ஈரான் புரட்சிகர படையின் கடற்பிரிவு தரப்பு, ஈரானின் எண்ணெய்க் கப்பல்கள் அல்லது சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்க நிலைகள் மீது கடுமையான பதிலடி தாக்குதல் நடத்தப்படும், எதிரிகளின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில், சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்த வந்த ட்ரோன்கள் எங்கிருந்து வந்தவை எனத் தெரியாது எனக் கூறப்பட்டுள்ளது.
கத்தாா் கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், தன்னை தொடா்புகொண்டு கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்தானி பேசியதாகவும், அப்போது இருவரும் பிராந்திய நிலவரம், அமைதி முயற்சிகள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறியுள்ளார்.
ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தான் ஏற்பாட்டின்பேரில் 2 கட்டங்களாக அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
இதில் ஈரான் வைத்த புதிய அமைதித் திட்டத்தை பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் ஈரான் சாகசத்தில் ஈடுபட்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தொடங்கும் எனவும் அறிவித்துள்ளார்.
மத்திய ஆசியாவில் அமைதியைச் சீா்குலைக்க வளைகுடா நாடுகள் மீது ரகசியமாக தாக்குதல் நடத்திவிட்டு, அதை ஈரான் தான் நடத்தியது என பழிபோட இஸ்ரேல் முயற்சிப்பதாக ஈரான் ஆரம்பம் முதல் குற்றஞ்சாட்டி வருகிறது.
அதனால் இஸ்ரேல் இதன் பின்னணியில் இருக்கலாமோ என்ற சந்தேகமும் உள்ளது.
ஆனால், இஸ்ரேல் இதுகுறித்து எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan