Paristamil Navigation Paristamil advert login

நான் அறியேன்

நான் அறியேன்

3 பங்குனி 2026 செவ்வாய் 15:20 | பார்வைகள் : 165


வீசும் காற்றினிலே  விடலை 
அவள் கூந்தல் காணவில்லை
எவ்விடமும் செல்லாமல்  இவ்விடம்
வா என ஈர்க்கும் அவள் கண்களும்
காணவில்லை

நித்தம் அந்த தனிமையிலே
மௌனத்தில் வசீகரிக்கும் அந்த
நிழலும் தோன்றவில்லை 
எண்ணத்தில் நிலை கொண்டு 
என் எழுத்திலே வளைந்தோடும் அந்த பெண்ணே

இதை நீ வாசிப்பாயோ 
நான் அறியேன் ….
உள்ளத்தில் குடி கொண்டு 
எழுத்தினில் உரு பெற்றாய் 
சற்று என் உயிருக்கு உணவளிப்பாய்
நின் காட்சி தருவாய் 
மென் காற்றதிர ஒலி தருவாய் …

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026