Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானில் பொம்மையைத் தாயாகக் கருதிய குரங்குக்குட்டி

 ஜப்பானில் பொம்மையைத் தாயாகக் கருதிய குரங்குக்குட்டி

20 மாசி 2026 வெள்ளி 14:37 | பார்வைகள் : 187


ஜப்பானில் உள்ள பூங்காவில் குரங்குக்குட்டு ஒன்று குரங்கு பொம்மையுடன் உலா வரும் காட்சி இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது

2025 ஜூலை மாதம் பிறந்த குரங்கு, பிறந்த சில நாட்களிலேயே அதன் தாயால் நிராகரிக்கப்பட்டது.

தனிமையால் வாடிய இந்தக் குட்டிக்கு பூங்கா ஊழியர்கள் ஒரு மென்மையான ஒராங்குட்டான் பொம்மையை வழங்கினர்.

அதையே தனது தாயாகக் கருதிய குரங்குக்குட்டி எங்கு சென்றாலும் அந்தப் பொம்மையைத் தூக்கிக்கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது.

பூங்கா ஊழியர்களின் தொடர் முயற்சியால், பஞ்ச் என்ற அந்த குட்டி குரங்கு தற்போது தனது இனத்தைச் சேர்ந்த மற்ற மெகாக் (Macaque) குரங்குகளுடன் மெல்ல மெல்ல பழகத் தொடங்கியுள்ளது.

கூட்டத்திலுள்ள ஒரு பெரிய குரங்கு தற்போது பஞ்ச் குட்டியைத் தனது அரவணைப்பில் எடுத்துக்கொண்டுள்ளது. அந்தக் குரங்கு பஞ்ச் குட்டியைச் சுத்தம் செய்வது (Grooming) மற்றும் பராமரிக்கும் பணிகளைச் செய்யத் தொடங்கியுள்ளது.

இது குரங்கு இனத்தில் ஒரு குட்டியை ஏற்றுக்கொண்டதற்கான மிக முக்கிய அடையாளமாகும். இப்போது மற்ற குட்டிக் குரங்குகளும் அந்த குரங்கு குட்டியும் சேர்ந்து விளையாடத் தொடங்கியுள்ளன.

இதனால் எப்போதும் பொம்மையைக் கட்டியணைத்துக் கொண்டிருந்த பஞ்ச், இப்போது அவ்வப்போது பொம்மையைத் தனியே வைத்துவிட்டு மற்ற குரங்குகளுடன் ஓடி விளையாடுவதைக் காண முடிகிறது.

தனது பொம்மைத் தாயை ஒரு பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்தி வந்த பஞ்ச், இப்போது நிஜமான உறவுகளின் அரவணைப்பைப் பெற்று வருவது இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

#KeepGoingPunch என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்