Paristamil Navigation Paristamil advert login

மகள் செல்போனுக்கு அடிமையாவதை தடுக்க பவுன்சர்களை நியமித்த பெற்றோர்

மகள் செல்போனுக்கு அடிமையாவதை தடுக்க பவுன்சர்களை நியமித்த பெற்றோர்

5 வைகாசி 2026 செவ்வாய் 15:16 | பார்வைகள் : 890


இந்திய மாநிலம் குஜராத்தில் தனது மகள் செல்போனுக்கு அடிமையாவதை தடுக்க, நபர் ஒருவர் பவுன்சர்களை நியமித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், செல்போனுக்கு அடிமையாகி இணையத்தில் நேரத்தில் செலவிட்டுள்ளார்.  

இதனால், அவரிடம் இருந்து செல்போனை பறித்தபோது, நிலைமை மேலும் கடினமானது. அதாவது, அவர் கடுமையான கோபத்துடன் நடந்துகொண்டு தாயை தாக்கியிருக்கிறார். ஒரு சம்பவத்தில், அவர் வீட்டு உபகரணங்களைத் தூக்கி எறிந்துள்ளார்.

இதன் காரணமாக பயந்தபோன சிறுமியின் பெற்றோர் கடுமையான நடவடிக்கை ஒன்றை எடுத்தனர்.  

அதாவது, அவளை இரவும் பகலும் கண்காணிக்க நான்கு பவுன்சர்களை (பாதுகாப்பு பணியாளர்கள்) நியமித்துள்ளனர்.

அவர்கள் இரண்டு Shift-களில் பிரிந்து பணியாற்றுவதாக கூறப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட ரூ.65,000 தொகையை சிறுமியின் பெற்றோர் செலவழிப்பதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் பழக்கம் மற்றும் ஆக்ரோஷம் தொடர்பான பிரச்சனைகள் உள்ள பதின்வயதினரைக் கையாள்வதற்காக, தனியார் வீடுகளுக்குள்ளும் பணியமர்த்தப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.