ஒரு ஆண்டில் 6,8 சதவீதமாக உயர்ந்த வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை!!
29 தை 2026 வியாழன் 14:18 | பார்வைகள் : 1489
2025 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில், France Travail-இல் Catégorie A (எந்த வேலைசெயலும் இல்லாதவர்கள்) என பதிவு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு தேடுபவர்களின் எண்ணிக்கை, கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2,6% உயர்ந்துள்ளது என்று தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு ஆண்டில் இந்த உயர்வு 6,8% ஆகும். இந்த பிரிவில் மட்டும், மொத்தமாக 3,347,700 பேர் வேலை தேடி வருகின்றனர். Catégories A, B, C, D மற்றும் E அனைத்தையும் சேர்த்து கணக்கிட்டால், France Travail-இல் பதிவு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு தேடுபவர்களின் மொத்த எண்ணிக்கை 6,489,100 பேர் என Dares தெரிவித்துள்ளது.
இந்த உயர்வு, 2025 தொடக்கம் அனைத்து RSA பெறுநர்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பு திட்டங்களில் உள்ள இளைஞர்கள் பதிவு செய்யப்பட்டதாலும், ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த புதிய தண்டனை முறையாலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிர்வாக மாற்றங்கள் இல்லாமல் இருந்திருந்தால், வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை நான்காவது காலாண்டில் 2% மட்டுமே உயர்ந்திருக்கும் என்றும், ஆண்டு அளவில் இந்த உயர்வு 1,7% ஆக மட்டுப்பட்டிருக்கும் என்றும் Dares விளக்குகிறது. மூன்றாவது காலாண்டிலேயே Catégorie A-வில் வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே உயர்வடைந்திருந்ததமையும் குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan