மீண்டும் இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி!
18 தை 2026 ஞாயிறு 15:05 | பார்வைகள் : 191
சூர்யா ரசிகர்கள் தற்போது மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது தற்போதைய படத்தை முடித்த பிறகு, சூர்யா அடுத்ததாக யாருடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் நிலவி வந்தது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, இயக்குநர் பாண்டிராஜ் உடன் சூர்யா மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கனவே சூர்யா – பாண்டிராஜ் கூட்டணியில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் கமர்ஷியல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதற்கு முன்னதாக சூர்யாவின் தயாரிப்பில் கார்த்தி நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களை பாண்டிராஜ் வழங்கியுள்ளார்.
‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் சமூக கருத்துக்களுடன் கூடிய ஆக்ஷன் கலந்திருந்தது. ஆனால், இந்தப் புதிய படம் பாண்டிராஜின் டிரேட்மார்க் பாணியான கிராமத்து பின்னணியில் அமைந்த முழு நீள குடும்பத் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
குடும்ப உறவுகள், சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தத் திரைக்கதை அமையவுள்ளதாம்.சூர்யா தற்போது தனது 46 மற்றும் 47-வது படங்களில் பிஸியாக இருக்கும் நிலையில், இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் ஒரு ‘கடைக்குட்டி சிங்கம்’ அல்லது ‘வம்சம்’ பாணியிலான மேஜிக்கை சூர்யாவிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan