Paristamil Navigation Paristamil advert login

விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்!

விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கில் திடீர்  திருப்பம்!

3 பங்குனி 2026 செவ்வாய் 15:22 | பார்வைகள் : 1709


நடிகரும், தவெக தலைவருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். தனது மனுவில் விஜய்க்கும் ஒரு நடிகைக்கும் தொடர்பு உள்ளது என குற்றம்சாட்டிய சங்கீதா, அந்த நடிகையுடன் விஜய் வெளிநாடுகளில் சுற்றினார் என்றும் இதனால் நானும், எனது குழந்தைகளும் அவமானத்தை சந்திக்க நேரிட்டது என்றும் தெரிவித்து இருந்தார்.

மேலும் தான் எவ்வளவோ சொல்லியும் விஜய் அந்த நடிகையுடன் தொடர்பில் இருப்பதை நிறுத்தவில்லை. இதனால் விவகாரத்து செய்வதை தவிர வேறு வழியில்லை என்று சங்கீதா தெரிவித்து இருந்தார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மனைவியின் அதிரடி முடிவு விஜய்ய்யின் இமேஜை வெகுவாக பாதித்துள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், இந்த விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பமாக மனைவி சங்கீதாவுடன் விஜய் சமசரம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மனைவி சங்கீதா, மகன் சஞ்சய், மகள் திவ்யா ஆகியோருக்கு தலா 250 கோடி ரூபாய் வழங்க விஜய் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனுவை திரும்ப பெற வேண்டும் என சங்கீதாவிடம் விஜய் கூறியதாகவும் தகவல்கள் கசிகின்றன.

விஜய், சங்கீதா விவகாரம் பொதுவெளியில் பேசுபொருளாகி வரும் நிலையில், இதனால் அரசியலில் தனக்கு எந்த பின்னடைவும் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள விஜய், அதன் காரணமாகவே மனைவியுடன் சமரசம் பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விஜய்யின் சமசரத்தை ஏற்று சங்கீதாவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக விஜய் தரப்பில் இருந்தோ இல்லை சங்கீதாவிடம் இருந்தே எந்தவித அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.