Paristamil Navigation Paristamil advert login

மகிழ் திருமேனி இயக்கத்தில் விஜய் சேதுபதி.?

மகிழ் திருமேனி இயக்கத்தில் விஜய் சேதுபதி.?

4 பங்குனி 2026 புதன் 13:11 | பார்வைகள் : 1139


தற்போது 'ட்ரெயின், ஸ்லம் டாக் 33, ஜெயிலர்-2' போன்ற படங்களில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் மணிகண்டன் இயக்கும் 'காட்டான்' என்கிற வெப்தொடரிலும் நடிக்கிறார். இதையடுத்து அஜித் நடிப்பில் 'விடாமுயற்சி' படத்தை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் விஜய் சேதுபதி.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழி ரசிகர்களை இலக்காக வைத்து இயக்கப்படும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்க, ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார். இதற்கு முன்பு தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'லியோ' படத்தில் சஞ்சய் தத் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்