Paristamil Navigation Paristamil advert login

நேருக்கு நேர் மோதி நொறுங்கிய கார்கள் – சிறுவர்கள் காயம்!!

நேருக்கு நேர் மோதி நொறுங்கிய கார்கள் – சிறுவர்கள் காயம்!!

28 ஆவணி 2025 வியாழன் 16:55 | பார்வைகள் : 4424


Fontainebleau காட்டுப் பகுதியில்,இன்று (28/08/2025) காலை  9 மணியளவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், 13 வயது சிறுவன் மற்றும் ஒன்றரை வயது குழந்தை ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

நிஸான் காஷ்காய் காரை ஓட்டிய 53 வயது நபர் சிறிய காயத்துடன் தப்பியுள்ளார் ஆனால் மற்றொரு காரில் பயணம் செய்த மொராக்கோ பதிவு எண் கொண்ட குடும்பத்தில், பெற்றோருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். பின்னர் அவர்கள்  ஆபத்தான எல்லையை கடந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து காரணமாக காலை 9 மணி முதல் 11.30 மணி வரை சாலையில் போக்குவரத்து முடக்கப்பட்டிருந்தது. மொத்தம் 14 தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்