Paristamil Navigation Paristamil advert login

இயக்குனர் வேலு பிரபாகரன் யார் ?

 இயக்குனர் வேலு பிரபாகரன் யார்  ?

18 ஆடி 2025 வெள்ளி 12:59 | பார்வைகள் : 210


தமிழ் திரையுலகில் இயக்குனர், ஒளிப்பதிவாளர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்தவர் வேலு பிரபாகரன். இவர் கடந்த 1980-ம் ஆண்டு வெளிவந்த இவர்கள் வித்தியாசமானவர்கள் என்கிற திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். பின்னர் 1989-ல் நாளைய மனிதன் என்கிற படம் மூலம் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை அதிசய மனிதன் என்கிற தலைப்பில் எடுத்து அதிலும் வெற்றி கண்டார் வேலு பிரபாகரன். பின்னர் கடவுள், புரட்சிக்காரன், சிவன் போன்ற திரைப்படங்களை வேலு பிரபாகரன் இயக்கினார்.

இயக்குனர் வேலு பிரபாகரன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேலு பிரபாகரனின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வேலு பிரபாகரனின் உடல் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாம். இதையடுத்து ஞாயிறன்று அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வேலு பிரபாகரன் சினிமாவில் பேமஸ் ஆனதை விட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தான் பிரபலமானார். இவர் முதன்முதலில் நடிகை ஜெயதேவி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இதையடுத்து, கடந்த 2017-ம் ஆண்டு தன்னுடைய 60வது வயதில் நடிகை ஷெர்லி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். நடிகை ஷெர்லி, வேலு பிரபாகரன் இயக்கிய காதல் கதை என்கிற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஆவார். அப்படத்தில் பணியாற்றும் போது அவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது.

இயக்குனர் வேலு பிரபாகரன் ஜெயதேவியை திருமணம் செய்யும் முன்னரே அவரிடம் நடிகை சில்க் ஸ்மிதா புரபோஸ் செய்தாராம். ஆனால் அதற்கு முன்பே அவர் ஜெயதேவிக்கு வாக்குறுதி கொடுத்ததால் சில்க் ஸ்மிதாவின் காதலை ஏற்க மறுத்திருக்கிறார் வேலு பிரபாகரன். நான் நினைத்திருந்தால் சில்க் ஸ்மிதாவின் காதலை ஏற்றிருக்கலாம். ஆனாலும் ஜெயதேவிக்கு கொடுத்த வாக்குறுதியின் காரணமாக சில்க் ஸ்மிதாவிற்கு நோ சொல்லிவிட்டேன் என இயக்குனர் வேலு பிரபாகரன்,  யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது மனம்விட்டு பேசி இருந்தார். அது தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்