Paristamil Navigation Paristamil advert login

இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் பஞ்சாயத்தை தீர்த்து வைத்தாரா ரஜினி?

இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் பஞ்சாயத்தை தீர்த்து வைத்தாரா ரஜினி?

17 ஆடி 2025 வியாழன் 17:54 | பார்வைகள் : 227


இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தீர்க்க சூப்பர் ஸ்டார் ரஜினி சமாதான தூதுவராக சென்றதாக கூறப்படும் தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 3' படத்தின் படப்பிடிப்பு இன்னும் சிறிது மீதமுள்ள நிலையில், அந்தப் படம் கிட்டத்தட்ட கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. 'இந்தியன் 2' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், 'இந்தியன் 3' படத்தின் மீது ஷங்கர் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், தயாரிப்பாளர் சுபாஸ்கரன் ரஜினியிடம் போன் செய்து ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தக் கோரிக்கை விடுத்ததாகவும், அவரது கோரிக்கையின் அடிப்படையில் ஷங்கரிடம் ரஜினி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து, விரைவில் 'இந்தியன் 3' திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், அதே நேரத்தில், பட்ஜெட்டை குறைக்க வேண்டும் என்று சுபாஸ்கரன் விடுத்த கோரிக்கையை ஷங்கர் ஏற்கவில்லை என்றும், இதனால் இன்னும் அதிருப்தியில்தான் ஷங்கர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ரஜினி தலையிட்டதன் காரணமாக 'இந்தியன் 3' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்