Paristamil Navigation Paristamil advert login

'வணக்கம்' சொன்னால் பாதி விலையில் Café குடிக்கலாம் - பிரான்சில் புதிய யுக்தி

'வணக்கம்' சொன்னால் பாதி விலையில் Café குடிக்கலாம் - பிரான்சில் புதிய யுக்தி

5 சித்திரை 2016 செவ்வாய் 09:51 | பார்வைகள் : 21437


உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து சேரும் நாடாக பிரான்ஸ் இருக்கிறது. வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல நூதன விளம்பரங்களையும், சலுகைகளையும் பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.  இப்போது பிரான்சில் உள்ள சில Café கள் ஒருபடி மேலே போய், புதிய யுக்தி ஒன்றை கையாள்கின்றனர்.

 
சில குறிப்பிட்ட café குள் நீங்கள் நுளைந்து அங்கிருக்கும் வெயிட்டரிடம், bonjour அல்லது Hello சொல்லி ஒரு café ஓடர் பண்ணினால்... உங்கள் 'பில்'லில் பாதிதான் வரும்! இப்படியாக 5 யூரோக்கள் பெறுமதியான Café யை நீங்கள் 2 யூரோக்களுக்கு குடிக்கலாம்! நம்ப முடியவில்லையா... தொடர்ந்து படியுங்கள்..!
 
பாரிஸில் உள்ள, மிகவும் விலை உயர்ந்த  Prix du Café கு செல்லுங்கள். அங்கு ஒரு café யின் விலை 7 யூரோக்கள். நீங்கள் ' Un café, sil vous plait ' கேட்டால் அந்த café உங்களுக்கு 4.25 யூரோக்களுக்கு கிடைக்கும். அதே நீங்கள் 'Bonjour, Un Café S'il vous plait ' என கேட்டால், அந்த Caféயின் விலை வெறுமனே 1.40  யூரோ தான்.
 
 
Bonjour சொல்வதோ S'il vous plait சொல்வதோ அத்தனை கடினம் இல்லையே... பின் ஏன் இப்படி ஒரு ஏற்பாடு என்றால்... எல்லாம் ஒரு விளம்பரம் தான். ஆனா ஒரு Café கடைக்காரர் இப்படி சொல்கிறார். 'ஒருவரை கண்டதும் வணக்கம் சொல்வதும், ஒரு விஷயத்தை கேட்கும் போது Request ஆக கேட்பதும் பிரெஞ்சு மக்களின் பண்பாடு. ஆனால் இப்போது உள்ள எந்திர வாழ்க்கையில் இந்த பண்பாடு மெல்லமாக அடிபட்டு செல்கிறது. அதை திரும்பவும் கொண்டுவருவதற்காகவே இப்படி ஒரு ஏற்பாடு!' என்கிறார்.
 
இது அத்தனை நம்பும்படியாக இல்லையே என்று உங்களுக்கு தோன்றினால் நாங்கள் என்ன செய்வது??!! 7 யூரோ  Café உங்களுக்கு 1.40  யூரோவிற்கு வேண்டுமா இல்லையா??!! வேண்டும் என்றால் ஒரு 'Bonjour, Un Café S'il vous plait ' சொல்லுங்கள்!!

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்