மாவீரன் நெப்போலியன் எழுதிய காதல் கதை!
20 சித்திரை 2016 புதன் 09:44 | பார்வைகள் : 27176
ஓகஸ்ட் மாதம் 15ம் திகதி, 1769 ஆம் ஆண்டு பிறந்த மாவீர சக்கரவர்த்தி நெப்போலியன் ஒரு நாவல் எழுதியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா??! அதுவும் காதல் கதை??!
ஒரு பிரெஞ்சு இராணுவ வீரனுக்கும், ஒரு சாதாரண பெண் ஒருத்திக்கும் ஏற்பட்ட காதலை மையமாக வைத்து 1795 ஆம் ஆண்டு இந்த காதல் கதையை எழுதினார் நெப்போலியன்.
அந்த நாவலுக்கு Clisson et Eugénie என பெயர் வைத்தார். இதில் Clisson என்பவர் தான் கதையின் நாயகன். புரட்சிகரமான பிரெஞ்சு இராணுவ வீரன். Ruénie என்பது நாயகி. அழகான காதல் தேவதை. இருவருக்குமிடையே உள்ள காதல் மற்றும் திருமண வாழ்க்கையே நாவல் பேசுகிறது.
ஆனால் இந்த நாவல் புத்தகமாக வெளியாகவில்லை. பிரெஞ்சில் எழுதப்பட்ட இந்த நாவலை பிரெஞ்சு 'அரசு உடமை'யாக பாதுகாத்து வருகிறது. பிரெஞ்சில் வெளிவருவதற்கு முன்னரே, இதன் ஆங்கில பதிப்பு வெளியாகிவிட்டது.
நெப்போலியன் தனது 26 வது வயதிலேயே இந்த நாவலை எழுதிவிட்டார். அதாவது அவருடைய மனைவி Joséphine ஐ சந்திக்கும் முன்னரே;
Peter Hicks மற்றும் Emily Barthet இருவரும் சேர்ந்து இந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்கள். 2009ல் இந்த ஆங்கில பதிப்பு வெளியானது.
நீங்கள் இந்த நாவலை படிக்க விரும்பினால், Amazon இணையத்தளத்திற்கு செல்லவும். 12.95 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையில் உள்ளது!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan