தொடருந்துப் பணியாளர்களின் ஊதியம் எவ்வளவு - பணிப்புறக்கணிப்பின் காரணம்!!

9 வைகாசி 2025 வெள்ளி 11:02 | பார்வைகள் : 655
SNCF பணியாளர்களின் பனிப்புறக்கணிப்பிற்கான காரணம் ஆக இருக்கும் இவர்களின் ஊதியம் என்ன?
SNCF இன் தொடருந்துக் கட்டுப்பாட்டாளர்கள், தொடருந்து செலுத்துபவர்கள் என 34.000 பேர் பணி புரிகின்றனர். இவர்கள் பல விதமான ஒப்பந்தங்களில் பணி புரிகின்றார்கள். இவர்களே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பின்வரும் ஊதியத் தொகைகள் அனைத்தும் சமூகக் கழிப்பீடுகள் கழிக்கப்பட்டு, கையில் வரும் ஊதியம் (salaires Net) ஆகும்.
தொடருந்துகளைக் கண்காணித்து, தண்டவாளங்களைக் கண்காணித்து, தொடருந்து புறப்பட அனுமதி கொடுக்கும் தொழில்நுட்பவியலாளர்களான கட்டுப்பாட்டாளர்களிற்கு (contrôleur) ஆரம்பகால ஊதியமாக சராசரியாக 1.420 யூரோக்களும், அவரின் பணி நிறைவடையும் காலத்தின் போது கிட்டத்தட்ட 2.300 யூரோக்களும் ஊதியமாக வழங்கப்படும்.
அடிப்படை தொடருந்துச் சாரதிக்கு 1.600 யூரோக்களும், அவரின் பணி நிறைவடையும் காலத்தின் போது 2.800 யூரோக்களும் வழங்கப்படும்.
அதாவது ஊதிய உயர்வானது நீண்ட காலத்திற்குப் பிரித்துப் பிரித்தே வழங்கப்படும்.
தகுதி நிலையிலுள்ள (conducteur au statut) சாரதிக்கு ஆரம்ப கால ஊதியமாக 2.800 யூரோக்களும் பணி நிறைவடையும் காலத்தின் போது கிட்டத்தட்ட 3.700 யூரோக்களும் வழங்கப்படும். இதில் 25 சதவீதத்திற்கு மேல் ஊக்கத்தொiயான primes ஆகும்.
SNCF இயக்குநரகம் பணியாளர்களிற்கு அவர்களின் 20 சதவீத ஊதிய உயர்வு பல நீண்ட வருடங்களிற்குப் பிரித்தே வழங்கப்படும் எனவும், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் ஒன்றும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் திட்டவட்டமாக மறுத்துள்ளது.