Paristamil Navigation Paristamil advert login

"Grande Mosquée de Paris" - சில தகவல்கள்!!

6 ஆடி 2016 புதன் 10:30 | பார்வைகள் : 22254


இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இனிய ரமழான் நல்வாழ்த்துக்கள். இன்று, பிரான்சின் மிகப்பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றான Grande Mosquée de Paris பள்ளிவாசல் குறித்து சில தகவல்களை பார்ப்போம்!!
 
பிரெஞ்சு இஸ்லாமிய கமிட்டிக்கு இந்த பள்ளிவாசல் தான் தலைமைப்பள்ளிவாசல். பரிசில் 5ம் வட்டாரத்தில் அமைந்திருக்கிறது Mosquée de Paris. 
 
முதலாம் உலகப்போர் முடிவடைந்ததின் பிற்பாடு, 1926 ஆண்டு கட்டப்பட்டது இந்த பள்ளிவாசல். 
 
இந்த பள்ளியில் 2012ஆம் ஆண்டு Homosexual Muslims of France என, ஓரினச்சேர்க்கையாளர்கள் தொழுவதற்குரிய பகுதி ஒன்று உருவாக்கப்பட்டது. 
 
இஸ்லாமியர்களின் கட்டிடக்கலை வடிவமான Mudéjar எனும் அமைப்பிலேயே இந்த கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது. 
 
பிரான்சில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கான தொழுகை நேர மாற்றம், நோன்பு திகதிகள், பெருநாள் திகதிகள் இந்த பள்ளிவாசலில் வைத்தே அறிவிக்கப்படுகின்றன. 
 
ஜூலை 15, 1926 ஆம் ஆண்டு இந்த பள்ளிவாசல் திறந்துவைக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் பள்ளிவாசலுக்குள் நுழைவதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. 
 
இரண்டாம் உலக யுத்தத்தின் போது, நாஜி படைகளிடமிருந்து பல மக்களை ரகசியமாக பாதுகாத்து வைத்திருந்தது இந்த பள்ளிவாசல்! 
 
இப்படியாக பல பெருமைகள் கொண்ட இந்த பள்ளிவாசலில் இன்றைய தினம் ஈத் முபாரக் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்