Paristamil Navigation Paristamil advert login

"கலாய்ப்பதே கடமை!" - Charlie Hebdo!!

14 ஆடி 2016 வியாழன் 12:36 | பார்வைகள் : 23416


ஊர் உலகத்துல என்ன நடந்தாலும் சரி.. கலாய்ப்பதே கடமை என பணியாற்றிவரும் Charlie Hebdo பத்திரிகை நீங்கள் அறிந்ததுதான்!! எதையெல்லாம் 'பெரிய' விஷயம் என கருதுகிறோமோ... எதையெல்லாம் 'புனிதம்' என கருதுகிறோமோ... அதையெல்லாம் கேலியும் கிண்டலும் கலாய்த்தலும் கல்லடித்தலுமாய் கொண்டு இயங்கி வருகிறது இப்பத்திரிகை! 
 
இவர்களின் கிண்டல் கேலி, அட்டைப்படத்தில் இருந்தே ஆரம்பித்துவிடும்... ஒவ்வொரு வாரமும் எந்த அரசியல் தலைவரை அட்டைப்படத்தில் கொண்டுவரப்போகிறார்களோ என 'திக் திக்' என்று இருக்கும். ஆனால் பத்திரிகைச் சுதந்திரம் கொடிகட்டி பறக்கும் இந்நாட்டில், Charlie Hebdo மீது எவரும் அதிகப்படியான விமர்சனங்கள் வைப்பதில்லை. 
 
இருந்தாலும், அவ்வப்போது ஏதேனும் குளறுபடிக்குள் சிக்கிடுவதுண்டு. இப்படித்தான் ஒரு தடவை நிக்கோலஸ் சர்கோசியின் மகன் Jean Sarkozy, யூதத்துக்கு மாறப்போகிறார் என ஒரு குண்டை தூக்கி போட்டு மாட்டிக்கொண்டது. இதனால் கார்ட்டூனிஸ்ட் Siné மீது வழக்கெல்லாம் பதிவு செய்யப்படது. Siné ஐ மன்னிப்புக் கடிதம் எழுதச்சொல்லி பணிக்கப்பட்டது. 'இதெற்கெல்லாம் அஞ்சுகிற ஆளா நான்?' என வழக்கில் வாதாடி, 40,000 யூரோக்கள் பணத்தை நஷ்ட்ட ஈடாக பெற்றுக்கொண்டார் Siné. இது நடந்தது 2010ல்.
 
Charlie Hebdo பத்திரிகை கிண்டல் செய்வதில் பெரும்பான்மையானது மதங்கள் தான். குறிப்பாக கத்தோலிக்கம், இஸ்லாம், யூதம் போன்ற மதங்களை ஏகத்துக்கும் போட்டு தாளிக்கிறது. அதன் பொருட்டு இரண்டு தடவைகள் தாக்குதலுக்கும் இலக்காகியுள்ளது. 2011ஆம் ஆண்டும், 2015 ஆம் ஆண்டும்... !! 2015 ஆம் ஆண்டு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 'பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது!' என மீண்டும் காலாய்த்தல் வேலையை தொடர்கிறது. 
 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்