Paristamil Navigation Paristamil advert login

மரத்தை வெட்டிய திருடன்!

மரத்தை வெட்டிய திருடன்!

19 ஆடி 2016 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 22115


பரிசின் பதினேழாம் வட்டாரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு சம்பவம் நடந்தது. Avenue de Villiers தெருவில் வசிக்கும் ஒரு பெண்மணி, வாடகைக்கு எடுத்த ஸ்கூட்டரை வீட்டுக்கு வெளியில் உள்ள ஒரு மரத்தில் 'செயின்' போட்டு 'லொக்' செய்து, நிறுத்தி வைத்திருந்திருக்கிறார். 
 
அன்றைக்கென்று பார்த்து... ஸ்கூட்டரை திருடுவதற்கு ஒரு திருடன் வந்துவிட்டான். பைக் தான் மரத்தில் 'லொக்' செய்யப்பட்டு இருக்கிறதே...? எங்கேயோ விரைந்து சென்று ஒரு மரம் வெட்டும் இயந்திரத்தை கொண்டுவந்து மரத்தை அடியோடு கூறு போட்டு வீழ்த்தியிருக்கிறான். அதன் பின்னர் ஸ்கூட்டரை திருடிக்கொண்டு ஓடிவிட்டான். 
 
ஞாயிற்றுக்கிழமை காலையில் குறிப்பிட்ட பெண்மணி சென்று  பார்த்தால் ஸ்கூட்டரை காணவில்லை. வாடகைக்கு எடுத்த ஸ்கூட்டர் திருட்டுப்போய்விட்டது.  உடனே காவல்துறையிடம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஸ்கூட்டரை திருடியது ஒரு குற்றம் என்றால், மரத்தை வெட்டியது அதை வென்ற குற்றம். மரத்தை வெட்டிய குற்றத்துக்காக திருடன் தேடப்பட்டு வருகிறான்!! அப்போ ஸ்கூட்டர்...??! அது அந்த பெண்மணியின் பிரச்சனை!! நீங்கல்லாம் எங்க இருந்து கிளம்பி வர்ரீங்க? என தலையில் கைவைத்து நிற்கிறார் அந்த பெண்மணி. அட பாவமே!

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்