மாதக்கணக்கில் உணவை திருடிய பலே திருடர்கள்!

29 ஆடி 2016 வெள்ளி 10:30 | பார்வைகள் : 21436
அஞ்சு பைசா திருடினா தப்பா? என அந்நியன் படத்தில் ஒரு வசனம் வரும்... அதுபோல் சின்ன சின்ன தப்பு செய்தால் பெரிதாக கண்டுகொள்ளப்படாது. ஆனால் அதுவே பல மாதங்களாக செய்துகொண்டிருந்தால்?! பெரிய தப்புத்தானே... வெறும் உணவு திருடியே அந்த நிறுவனத்துக்கு 170,000 யூரோக்கள் நஷ்ட்டம் வர வைத்த திருடர்கள் சிலரை பிரெஞ்சு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Saint-Jean தொடருந்து நிலையத்தில் பணிபுரியும் ஐவர் கொண்ட குழுவே இந்த 'அபேஸ்' வேலைகளில் ஈடுபட்டவர்களாகும். தொடருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்காக தயாரிக்கப்பட்ட உணவுகளை திருடி சாப்பிட்டிருக்கிறார்கள். இதனால் தொடருந்து நிறுவனத்துக்கும் பயணிகளுக்குமிடையில் பெரும் பஞ்சாயத்துக்கள் எல்லாம் எழுந்திச்சாம்! இதனால எங்களுக்கு 170,000 யூரோ நஷ்ட்டம் என கோரியிருக்கிறது.
கடந்த ஜனவரியில் இருந்து இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போ அந்த ஐவர் கொண்ட திருடர் சங்கம் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் இருக்கிறதாம்!