Paristamil Navigation Paristamil advert login

சிறைக்கூடத்தை 'லைவ்' செய்த இருவர்!

சிறைக்கூடத்தை 'லைவ்' செய்த இருவர்!

5 ஆவணி 2016 வெள்ளி 10:30 | பார்வைகள் : 22692


இப்படியான விசித்திர வழக்குகள் தினமும் தான் நடக்கிறது. புதுசு புதுசா தினுசு தினுசா தப்பு செய்து சிக்கிக்கொள்கிறார்கள். இதோ... இந்த வழக்கை பாருங்கள். சிறைக்கைதி இருவர் தாங்கள் இருந்த சிறையை 'பரிஸ்கோப்' செயலி மூலம் 'லைவ்'வாக ஒளிபரப்பு செய்திருக்கிறார்கள். அதுக்காக அவர்களை மறுபடியும் தூக்கி சிறையில் அடைத்திருக்கிறார்கள். 
 
லைவ் வீடியோ காண்பித்தது நான்கு மாதங்களுக்கு முன்னர். இப்போதுதான் அது ஊர்ஜிதமாகி, மீண்டும் ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. சிறைக்குள் இருந்த இவர்கள், டிஸ்வரி சேனலில் வருவது போல், 'இதுதான் நாங்க இருக்கும் சிறைக்கூடம்... இங்க அது இருக்கு இது இருக்கு...' என பேட்டி எல்லாம் கொடுத்து பெரும் அட்டகாசம் அது. அதில் ஒருவர் தன் ஜிம் உடம்பை காட்டி சாகசம் எல்லாம் நடத்தியுள்ளார் என்றால் பாருங்களேன்.
 
'ஏண்டா இதென்ன சிறையா.., இல்ல பார்ட்டி ஹாலா?!' என கடுப்பாகிய Toulon நகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி.. இன்னும் ஆறுமாதம் உள்ளேயே இருங்க என இம்மாதம் 3ம் திகதி தீர்ப்பளித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்