அழகு தேசம் Lyon. - சிறு அறிமுகம்!

19 ஆனி 2016 ஞாயிறு 12:36 | பார்வைகள் : 22450
பிரான்சில் அவசியம் பார்க்கவேண்டிய பகுதியாக லியோன் நகரம் இருக்கிறது. பிரான்சில் உள்ள மூன்றாவது மிகப்பெரிய நகரம் லியோன் ஆகும்!
பிரான்சை பொறுத்தவரை லியோன் மிக உணர்வுபூர்வமான பாரம்பரியமான நகரம் ஆகும். யுனெஸ்கோ வெளியிட்டுள்ள 'சிறந்த பாரம்பரிய பகுதிகள்'ளில் லியோன் நகரை சேர்ந்த சில பகுதிகள் இருக்கின்றன. 2013 ஆம் ஆண்டு கணக்கின் படி இங்கு 500,715 மக்கள் வசிக்கிறார்கள்.
பிரான்சின் மிகச்சிறந்த வருவாய் கொழிக்கும் இடமாகவும் லியோன் இருக்கிறது. எண்ணற்ற வங்கிகளும், ரசாயன, மருந்து உற்பத்திகள் போன்ற 'பயோடெக்' தொழில்கள் கொடிகட்டி பறக்கின்றன. சுற்றுலாப்பயணிகள் அதிகம் குவியும் இடமாக பரிசுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது லியோன். 'தி லைட்ஸ் ஆஃப் சிட்டி' என லியோனுக்கு மற்றுமொரு பெயரும் உண்டு! ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 8ம் திகதி தொடங்கி அடுத்த நான்கு நாட்களுக்கு லியோன் நகரம் 'பளிச்' நகரமாக விழாகோலம் பூண்டிருக்கும். 'ஒளி விழா' என மிக பிரபலமாக Light Festival இங்கு கொண்டாடப்படுகிறது. அந்த சமயங்களில் லியோனை தரிசிக்க ஆயிரம் கண்கள் வேண்டும்.
லியோனில் சுற்றுலாப்பணிகளுக்காக 'ஏகபோக' இடங்கள் குமிந்து கிடக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் 1872 ஆண்டு கட்டப்பட்ட 'Basilica of Notre-Dame de Fourvière' மலைக்கோட்டை ஆகும். இந்த சுற்றுலாத்தலத்தின் வரலாறுகளை நீங்கள் அங்கே நேரடியா தெரிந்துகொள்ளலாம்.
அட... லியோன் நகரில் ஒபேரா ஹவுஸ் கூட இருக்கிறது. 'Opéra National de Lyon' நீங்களே தேடி கண்டுபிடித்து, மறக்காமல் விஜயம் செய்துவிட்டு வாருங்கள்! Trompe-l'œil என குறிப்பிடப்படும் முப்பரிமான ஓவியங்களின் பிறப்பிடம் லியோன் தான். கண்காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். சென்று பார்த்தால், ஓவியத்தில் நீங்கள் நீளம் தூரம் அகலம் உயரம் என மெய்சிலிர்ப்பீர்கள். அத்தனையும் ஓவியங்கள் தாம்!
லியோன் பற்றி குறிப்பிடுவதற்கு பல விஷயங்கள் உள்ளன. இருந்தாலும் இப்பகுதியில் வெறுமனே ஆர்வத்தை தூண்டும் அளவுக்கு அறிமுகம் மட்டும் செய்வதால்.. இவ்வளவும் போதும் என நம்புகிறோம். இந்த விடுமுறைக்கு எங்கே பயணம்??! லியோனுக்குத்தானே?!