Paristamil Navigation Paristamil advert login

நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது - 'Europe 1' ரேடியோ!!

 நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது - 'Europe 1' ரேடியோ!!

22 ஆனி 2016 புதன் 10:31 | பார்வைகள் : 21096


பரிசில் உங்களுக்கு அதிகம் பிடித்த வானொலியா நிச்சம் Europe 1 இருக்கும். தெரிந்த Europe 1 வானொலி... தெரியாத சில தகவல்கள் இங்கே!!
 
பிரான்சில் இயங்கும் இந்த வானொலி சேவை, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரிலும் தன் சேவையை வழங்குகிறது. பிரான்சின் முக்கிய மூன்று நகரங்களான பரிஸ், மார்செய், லியோன் ஆகிய மூன்று நகரங்களில் வெவ்வேறு அலைவரிசைகளில் இயங்குகிறது Europe 1.
 
Europe1 முதன் முதலாக தனது சேவையை ஆரம்பித்தது 1955ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 1ம் திகதி. முதலில் செய்தி மாற்றும் கலாச்சார தகவல்களை வழங்குவதற்காக ஆரம்பித்த இந்த வானொலி, பின்னர் ரசிகர் வட்டம் அதிகரிக்க பிரபலமான பாடல்கள், நிகழ்ச்சிகளை தொகுக்க ஆரம்பித்தது.  
 
பிரபல நகைச்சுவையாளர், நடிகர் மற்றும் பாடகராகிய Patrick Topaloff அறுபதின் ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவரின் நிகழ்ச்சி ரேடியோ வரலாற்றிலேயே புதுமையாக இருந்தது. பல கட்டுப்பாடுகளை தகர்த்தது. பல ரசிகர்களை... குறிப்பாக இளைஞர்களை கவர்ந்து இழுத்தது Europe1.
 
"Europe 1, Bien entendu" என்பது Europe1 வானொலியின் தாரக மந்திரம்..!!
 
கடந்த 50 வருடங்களாக ஒரு நிகச்சி ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. Pour ceux qui aiment le jazz' எனும் இந்த நிகழ்ச்சி Jazz இசை பிரியர்களுக்கானது. 
 
Europe1க்கு சகோதர வானொலிகளும் உண்டு. RFM, Virgin Radio இவை இரண்டுமே Europe1 வானொலியோடு இணைந்தவை தான். 
 
ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றாப்போல் பல மாற்றங்களை எப்போதும் கண்டுவரும் Europe1, இன்று பல ரசிகர்களை தன்பக்கம் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்