Paristamil Navigation Paristamil advert login

திரைப்படமானது - கொள்ளைக்காரனின் வாழ்க்கை!

 திரைப்படமானது - கொள்ளைக்காரனின் வாழ்க்கை!

29 ஆனி 2016 புதன் 10:30 | பார்வைகள் : 22188


உண்மையில் இந்த கொள்ளைக்காரன் பற்றி 'சிகரம் தொட்ட மனிதர்கள்' பகுதியில் தான் வரவேண்டும். கொள்ளை அடிப்பதில் இவர் ஒரு 'லெஜெண்ட்'!! பின்னே??! இவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்றால் பாருங்களேன்..??!! 
 
'Jacques Mesrine' - 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் 'திருடர் குல திலக'மாக வாழ்ந்து மறைந்தவர். பல கொள்ளைகள், கடத்தல்கள் என நம்பியாராக வாழ்ந்தவர். சிறையில் இருந்து 'ஜஸ்ட் லைக் தட்' ஆக தப்பித்து சென்றவர். இறுதியில், இவரை பிடிக்கமுடியாமல்.. எதிர்பாரா விதமாக நான்கு காவல்துறையினரால் பதினைந்து தடவை சுடப்பட்டு கொல்லப்பட்டார். அப்படிப்பட்ட ஒரு திரு'டர்ர்ர்ர்ர்ர்ர்' பற்றி பிரெஞ்சு இயக்குனர் Jean-François Richet திரைப்படம் எடுத்தார். இரண்டு பாகங்களாக வெளிவந்தது அத்திரைப்படம்!
 
Mesrine - The Film
 
நடிகர் Vincent Cassel இப்படத்தின் நாயகன். Mesrine கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்தார். 2008ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் படத்தின் முதல் பாகமும், அதற்கு அடுத்த மாதம் நவம்பரில் இரண்டாம் பாகமும் வெளிவந்தது. 
 
பிரெஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தின் முதல் பாகம், Mesrine: L'instinct de mort எனும் பெயரில் வெளிவந்தது. அதன் இரண்டாம் பாகம் Mesrine: L'ennemi public № 1 எனும் பெயரில் வெளிவந்தது. 
 
முதல் பாகத்தில் Mesrine வாழ்க்கையில் கொள்ளைக்காரனாக மாறிய சம்பவங்களை கொண்டும், இரண்டாம் பாகத்தில் அவர் சிறையில் இருந்து தப்பித்ததின் பின்னர் வாழ்ந்த வாழ்க்கை பற்றியும் சொல்லப்பட்டிருந்தது. 
 
பின்னர், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த ஒலி அமைப்பு என மூன்று César Awards விருதுகளை பெற்றுக்கொண்டது இத்திரைப்படம்! இரண்டு பாகங்களையும் நேரம் கிடைக்கும்போது பார்த்துவிடுங்கள்! நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது!

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்