Paristamil Navigation Paristamil advert login

பேய்கள் குடியிருக்கும் Père Lachaise கல்லறை! - தில் இருந்தால் வாருங்கள்!!

பேய்கள் குடியிருக்கும் Père Lachaise கல்லறை! - தில் இருந்தால் வாருங்கள்!!

18 மார்கழி 2016 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 23789


கல்லறைகளில் பேய் தான் இருக்கும்... அதில் என்ன சந்தேகம்... என்கிறீர்களா? கொஞ்சம் பொறுமையாக மேற்கொண்டு படியுங்கள்...
 
பரிசிலே மிகப்பெரிய கல்லறை! மிக முக்கியமாக இரவு நேரங்களில் பேய்கள் நடமாட்டம் அதிகளவு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பரிசின் 20ஆம் வட்டாரத்தில் உள்ள இந்த கல்லறையே பரிசின் மிகப்பெரிய கல்லறை ஆகும். 1804 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த கல்லறை 44 ஹெக்டேயர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. 
 
அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், அவ்வழியால் செல்பவர்களும் சில 'அசமாத்த'ங்களை உணர்வதாக சொல்கிறார்கள். சில பல பேய் கதைகள் ( உண்மையா கற்பனையா என தெரியாது ) இக்கல்லறை குறித்து உலாவுகின்றன. இதற்கு காரணங்கள் இல்லாமலுமில்லை...
 
கல்லறையின் வாசலில் இருந்து அரை கி.மி தூரத்துக்கு அப்பால் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை! எங்கு அனுமதி மறுக்கப்படுகிறதோ.. அங்கு மர்மங்களும் அதிகரிக்கப்படும். இரண்டு நூற்றாண்டுகளை கடப்பதால், இரண்டு பெரும் உலக மகா யுத்தங்களுக்கு முகம்  கொடுத்தது இக்கல்லறை! 
 
'ஆபத்துக்கள்' என்பது உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இக்கல்லறைக்குள் சில பாழடைந்த பகுதிகளும், தூசி நிறைந்த சின்னங்களும் ஒரு இனம்புரியாத ' கிலி'யை ஏற்படுத்துகின்றன!
 
பல முக்கிய பிரமுகர்கள் இங்கு மீளா துயில் கொள்கிறார்கள். அவசியம் பார்க்கவேண்டிய கல்லறை இது. ஆனாலும் கொஞ்சம் தில்லோடு இறங்குங்கள்!!

வர்த்தக‌ விளம்பரங்கள்