உலகில் முதன்முறையாக செயற்கை இதயத்தை பொருத்திய பிரெஞ்சு மருத்துவத்துறை!!

5 தை 2017 வியாழன் 10:30 | பார்வைகள் : 21985
ஆச்சரியம் தான்! எங்களுக்கு மட்டுமல்ல... ஒட்டுமொத்த மருத்துவ துறைக்கே!! அன்றைய நாளை மறக்காமல் அனைத்து மருத்துவர்களும் குறித்து வைத்துக்கொண்டார்கள். 'உலகில் முதன் முறையாக ஒருவருக்கு செயற்கை இதயம் பொருத்தப்பட உள்ளது!' என்ற அறிவிப்புத்தான் அது!!
அன்று டிசம்பர் 21, 2013 ஆம் ஆண்டு. பரிசின் Georges Pompidou மருத்துவமனை! ஆண் நோயாளி ஒருவரின் இதயம் துடிப்பதை நிறுத்தவிருக்கிறது. லிதியம் (lithium-ion) பேட்டரியில் இயங்கக்கூடிய இதயம் கொண்டுவரப்படுகிறது. மருத்துவர் Alain Carpentier அந்த 'சர்ஜரியை' செய்ய இருக்கிறார். ஊடகங்கள் வெளியே காத்துக்கொண்டிருக்கின்றன. இதய மாற்று சிகிச்சை கேள்விப்பட்ட மக்களுக்கு செயற்கை இதய மாற்று சிகிச்சை என்பது மிகப்புதியது. சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.
செயற்கை இதயத்தின் விலை 150,000 யூரோக்கள். ஆரோக்கியமான மனித இதயத்தின் எடையைக் காட்டிலும் மூன்று மடங்கு எடை கூடியது. 'தொடர்ச்சியாக ஐந்து வருடங்களுக்கு செயற்படும்!' என மருத்துவர் Alain Carpentier தெரிவித்தார்.
பிரெஞ்சு சுகாதார அமைச்சர் Marisol Touraine, 'இது பிரெஞ்சு தேசத்துக்கு மிக பெருமையான தருணமாகும்' என ஊடகங்களுக்கு பேட்டியளிக்கிறார். பெண்களை விட ஆண்களுக்கே அதிகளவு இதயப்பிரச்சனை வருகிறது. இந்த செயற்கை இதயம் 86 வீத பிரச்சனைகளை சரி செய்யும் என தெரிவித்தார்.
சிகிச்சை வெற்றியளிக்கிறது!! மருத்துவ வரலாற்றில் புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்பட்டது!!
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025