பிரான்சின் மிக நீளமான பெயர் கொண்ட கிராமம்!
13 ஆவணி 2016 சனி 10:40 | பார்வைகள் : 23799
நீங்கள் வசிக்கும் ஊரின் பெயர் என்ன என கேட்டால்... பட்டென சொல்லிவிடுவீர்கள்! ஆனால் இங்கே ஒரு கிராமத்தினருக்கு அது பெரும் சோகம்! 'அதுவா... அது வந்து... அது..' என இழுத்து.. சொல்லலாமா வேணாமா என தயங்கிக்கொண்டிருப்பார்கள்... பக்கத்து ஊர் காரர் பஸ்சில் ஏறி... இந்த ஊரின் பெயரை சொல்வதற்குள்... அந்த ஊரே வந்துவிடும் என்றால் பர்த்துக்கொள்ளுங்களேன்..!!
அந்த ஊருக்குள் நுழையும் போது பெயர்பலகை வைத்திருப்பார்கள்..! இது ஊரின் பெயரா... அல்லது திருக்குறளை பிரெஞ்சில் எழுதி வைத்திருக்கிறார்களா என்ற குழப்பம் வந்துவிடும். சரி.,. பில்ட்அப் போதும்... வாங்க அந்த ஊரை தெரிந்துகொள்ளலாம்.
"Saint-Remy-en-Bouzemont-Saint-Genest-et-Isson"
பிரான்சின் Marne மாவட்டம் இருக்கிறதல்லவா? அங்கே தான் இருக்கிறது இந்த கிராமம். வித்தியாசமான பெயர்களை வைத்து சுற்றுலாப்பயணிகளை கவர்வதாக முன்னர் சொல்லியிருந்தோம் அல்லவா??! அதே தான் இதற்கும்! சரி... ஒரே ஒரு எழுத்தில் ஒரு ஊரின் பெயர் இருக்கிறது? தெரியுமா உங்களுக்கு?? தெரியாவிடின் நாளை வரை காத்திருங்கள்!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Emploi - வேலை வாய்ப்பு
பரிஸ் 17 இல் உள்ள சிறிய Super Market ஒன்றிற்கு
Architecte - plan divers
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire