'சிகரம் தொட்ட மனிதர்கள்' - Berthe Morisot!!
15 ஆவணி 2016 திங்கள் 11:10 | பார்வைகள் : 26004
இவ்வுலகில் பிறந்த அனைவரும் ஏதோ ஒரு திறமையுடன் தான் இருப்பார்கள். தன் திறமைகளை மூட்டை கட்டிவைத்து விட்டு ஏதேனும் ஒரு நிறுவனத்தில் செக்குமாடு போல் வேலை செய்து காலத்தை கழிப்பவர்களும் உண்டு... தன் திறமைகளையே காசாக்கி திறம்பட வாழ்பவர்களும் உண்டு. இந்த இருவர்களில் 'சிகரம் தொட்ட மனிதர்கள்' ஆகுவதற்குரிய வாய்ப்புகள் இரண்டாமவரிடமே பிரகாசமாய் இருக்கும். நமது Berthe Morisot போலே!!
Berthe Morisot ஒரு பெண் ஓவியர். ஜனவரி 14, 1841 ஆம் ஆண்டு பிரான்சின் Bourges நகரில் பிறந்தார். இவரின் தாத்தா ஒரு ஓவியராக இருக்க, இவருக்கு நான்கு ஐந்து வயதிலேயே கையில் தூரிகை வந்துவிட்டது. வர்ணங்களின் மாயாஜாலம் பிடிபட்டது. தாளில் வரைந்தாலும் தரையில் வரைந்தாலும்... தன் தங்கையின் முகத்தில் வரைந்தாலும் தன் எண்ணங்களின் படியே வண்ணங்களை கோர்த்து... வளர்ந்து வரைந்து வந்தார்!
ஓவியங்களில் நாட்டம் இருப்பதை தெரிந்துகொண்ட இவரின் தந்தை, Berthe Morisotஐ பரிசுக்கு அனுப்பி வைக்கிறார். பரிசுக்கு வந்தவர்... ஓவியங்களின் எதிர்காலங்கள் குறித்து படிக்கிறார். landscape ஓவியங்கள், Outdoor ஓவியங்கள் என புதியதாக கற்கிறார். பின்னர் 1864 ஆண்டு தனது முதல் ஓவிய கண்காட்சியை நடத்துகிறார். சில ஓவியங்கள் விற்றன.
அதன் பிற்பாடு... ஓவியங்களே சீவியம் என்றானது. புதிய முயற்சிகளை எல்லாம் ஓவியத்தில் நுழைக்கிறார். 1874ல், ஓவியர் Eugne என்பவரை திருமணம் செய்துகொள்கிறார். அதன் பின்னர் வருடா வருடம் ஓவியக்கண்காட்சி நடத்தினார். ஓவியங்கள் விற்கும் பணத்தில் தான் குடும்பம் ஓடியது. ஒவ்வொரு வருட கண்காட்சியின் போதும் ஏதேனும் ஒன்றை புதிதாக கண்டுபிடித்திருப்பார். புதிதாக ஒன்றை முயற்சி செய்திருப்பார். ஒரே பாணியில் ஓவியங்கள் வரைவதை ஒருபோதும் விரும்பாதவர்.
பின்னர் அவரின் Oil ஓவியங்களை அரசு பெற்றுக்கொண்டது. பத்திரப்படுத்தியது. 'The Cherry Tree' (1891-92) மற்றும் 'Girl with a Greyhound' (1893) போன்ற ஓவியங்கள் பெரும் புகழ்பெற்றன. Young Woman in a Ball Gown எனும் ஓவியம் அவருக்கு வாழ்நாள் முழுவதும் பெருமை தேடித்தந்தது. மார்ச் மாதம் 2ம் திகதி 1895ஆம் ஆண்டு Berthe Morisot மறைந்தார். ஓவியங்கள் இன்னமும் உயிர்ப்புடன் தான் உள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Vente
A VENDRE :
Une maison 80 M2 type F4,
Emploi - வேலை வாய்ப்பு
பரிஸ் 17 இல் உள்ள சிறிய Super Market ஒன்றிற்கு
Architecte - plan divers
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire