பறக்கும் விமானத்தில் பீட்சா!
27 ஆவணி 2016 சனி 11:58 | பார்வைகள் : 22367
கடை கையாய் ஏறி இறங்கி பீட்சா சாப்பிட்டதும், தொலைபேசியில் 'ஓடர்' குடுத்துவிட்டு... டெலிவரி போய் வரும்வரை காத்திருந்து 'ஐய்யயோ.. பீட்சா ஆறிப்போய் விட்டதோ?!' என பயந்து பீட்சா சாப்பிட்டதெல்லாம் போயே போச்ச்ச்!!
இனி நீங்கள் பீட்சா ஓடர் குடுத்தால்... ஜெட் வேகத்தில் வீட்டுக்கு வந்துவிடும்..??! எதில் என்று கேட்கிறீர்களா? பறக்கும் விமானத்தில்... ஆம்! ஆளில்லா சிறிய ரக விமானம் உங்கள் வீட்டு முகவரிக்கு வந்து பீட்சா கொடுத்துவிட்டு செல்லும். இது பாரிசுக்கு தான் புதுசு.. ஆனால் ஏலவே நியூஸிலாந்தில் அறிமுகம் ஆகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது .
பரிசுக்குள் முதற்கட்டமாக விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது இந்த சேவை. டாமினாஸ் பீட்சா நிறுவனம் முதன் முறையாக அறிமுகம் செய்ய இருக்கிறது. பிறகென்ன..??! சுடச்சுட பீட்சா வீடு தேடி வரும் பார்த்துக்கொள்ளுங்கள்!!






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan